Advertisement


தவான் சாதனை சதம்: முரளி விஜய் அபாரம்

ஜூன் 14, 2018.
 Comments [1]  
 


india, afghanistan, bangalore test
 

பெங்களூரு: பெங்களூரு போட்டியில் அசத்திய ஷிகர் தவான், டெஸ்ட் அரங்கில் உணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார். முரளி விஜய் தன் பங்கிற்கு சதம் அடித்தார்.

இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் டெஸ்ட் பெங்களூருவில் துவங்கியது. டெஸ்ட் அந்தஸ்து பெற்ற பின் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கும் முதல் போட்டி இது. ‘டாஸ்’ வென்று இந்திய அணி கேப்டன் ரகானே பேட்டிங் தேர்வு செய்தார். 

புதிய சாதனை

இந்திய அணிக்கு ஷிகர் தவான், முரளி விஜய் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. டெஸ்ட் அரங்கில் ஆப்கானிஸ்தான் அணிக்காக முதல் பந்தை வீசினார் யாமின் அகமத்ஜாய். முரளி விஜய் ஒருபுறம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த தவான் வழக்கம் போல ருத்ரதாண்டவம் ஆடினார். பவுண்டரி மழை பொழிந்த இவர், முகமது நபி பந்தில் சிக்சர் விளாசினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஷித் கான் வீசிய முதல் ஓவரில், மூன்று பவுண்டரிகள் அடித்தார் தவான். 47 பந்தில் அரைசதம் எட்டினார். முஜீப் அர் ரஹ்மான் ‘சுழலில்’ 4 பவுண்டரிகள் அடித்த இவர் உணவு இடைவேளைக்கு முன் 87வது பந்தில் சதம் அடித்தார்.

மழை தொல்லை

முதல் விக்கெட்டுக்கு 28.4 ஓவரில் 168 ரன்கள் சேர்த்த நிலையில், 96 பந்தில் 107 ரன்கள் எடுத்த தவான் (19 பவுண்டரி, 3 சிக்சர்) அவுட்டானார். முரளி விஜய் 16வது அரைசதம் எட்டினார். இந்திய அணி முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 248 ரன்கள் எடுத்திருந்த போது மழையால் போட்டி நிறுத்தப்பட்டது. ஒரு மணி நேரம், 15 நிமிடத்துக்குப் பின் மீண்டும் போட்டி துவங்கியது. கூடுதலாக 16 ரன்கள் மட்டும் சேர்த்த போது மீண்டும் மழை குறுக்கிட சிறிது தாமதம் ஆனது.

திடீர் சரிவு

வவாதர் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய முரளி விஜய் சதம் கடந்தார். இந்திய மண்ணில் தொடர்ந்து அடித்த மூன்றாவது சதம் இது. ராகுல் 11வது அரைசதம் அடித்தார். இந்நிலையில் முரளி விஜய் (105), ராகுல் (54) சிறிய இடைவெளியில் திரும்பினர். அடுத்து ரகானே (10), புஜாரா (35) அவுட்டாக, தினேஷ் கார்த்திக் (4) துரதிருஷ்டவசமாக ரன் அவுட்டானார்.

280 ரன்னுக்கு 1 விக்கெட் என வலுவாக இருந்த இந்திய அணி, அடுத்து 67 ரன் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 347 ரன்கள் எடுத்திருந்தது. பாண்ட்யா (10), அஷ்வின் (7) அவுட்டாகாமல் இருந்தனர்.

17 வயது, 78 நாட்கள்

தேசத்துக்கான அறிமுக டெஸ்டில் களமிறங்கிய இளம் வீரர் என்ற பெருமை பெற்றார் ஆப்கானிஸ்தானின் முஜீப் அர் ரஹ்மான். 66 ஆண்டுக்கு முன் பாகிஸ்தான் அறிமுக டெஸ்டில் (1952) ஹனீப் முகமது, 17 வயது 300 வது நாளில் களமிறங்கினார்.

முதல் இந்தியர்

டெஸ்ட் அரங்கில் உணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்த முதல் இந்திய வீரர் ஆனார் ஷிகர் தவான். இதற்கு முன் சேவக், 99 ரன் எடுத்ததே (2006, செயின்ட்லுாசியா, வெஸ்ட் இண்டீஸ்) அதிகம்.

* சர்வதேச அளவில் இந்த இலக்கை எட்டி 6வது வீரர் ஆனார் தவான். ஆஸ்திரேலியாவின் டிரம்பர் (1902), மகார்ட்னே (1921), பிராட்மேன் (1930), மஜித் கான் (பாக்., 1976), வார்னர் (ஆஸி., 2017) முதல் 5 இடத்தில் உள்ளனர்.

பிரதமர் வாழ்த்து

முதல் டெஸ்டில் பங்கேற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி வெ ளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தியில்,‘இந்தியாவுடன் வரலாற்று சிறப்பு வாய்ந்த முதல் போட்டியை விளையாடுவது மகிழ்ச்சி. இரு அணி வீரர்களுக்கும் வாழ்த்துக்கள்,’ என தெரிவித்தார்.

ஏமாற்றிய ‘சுழல்’

ஆப்கானிஸ்தான் அணி ‘சுழல்’ பவுலிங்கை பெரிதும் நம்பியது. மாறாக ரஷித் கான் 20.3 வது ஓவரில் தான் முதல் விக்கெட் வீழ்த்தினார். ரஷித் கான் (120/1), முஜீப் (69/1) என இருவரும் இணைந்து 2 விக்கெட் மட்டும் வீழ்த்தினர்.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
edison one week ago | Report abuse
அபாரமான ஆட்டம்
Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?