Advertisement


வெற்றியுடன் துவக்குமா ரஷ்யா: இன்று சவுதி அரேபியாவுடன் மோதல்

ஜூன் 13, 2018.
 Comments  
 


FIFA World Cup, Football, Russia, Saudi Arabia
 

மாஸ்கோ: உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடக்கும் முதல் போட்டியில் சொந்தமண்ணில் களமிறங்கும் ரஷ்ய அணி, சவுதி அரேபியாவை சந்திக்கிறது. 

உலக கோப்பை தொடரில் எளிதானது ‘ஏ’ பிரிவு தான். உருகுவே (‘நம்பர்–17’) தவிர எகிப்து (46), சவுதி அரேபியா (67), ரஷ்யா (70) அணிகள் தரவரிசையில் பின் தங்கியவை. இந்த தொடருக்காக ரஷ்யா, ரூ. 87,678 கோடி செலவு செய்துள்ளது. 

ஆனால் கடந்த எட்டு மாதங்களாக பங்கேற்ற 7 போட்டிகளில் 3 ‘டிரா’, 4 தோல்வி அடைந்துள்ளது. 1994, 2002, 2014 என களமிறங்கிய மூன்று முறையும் லீக் சுற்றை தாண்டியது இல்லை. இம்முறை தொடரை நடத்தும் அணி என்ற அடிப்படையில் களமிறங்கும் ரஷ்ய அணி, சொந்தமண்ணில் எழுச்சி பெறும் என நம்பப்படுகிறது. 105 போட்டிகளில் பங்கேற்ற அனுபவ கோல்கீப்பர் இகர் அகின்பீவ், டெனிஸ் ஷெரிஷேவ், ஆலன் டகோயவ் நம்பிக்கை தரலாம். 

சவுதி அரேபிய அணியை பொறுத்தவரையில் அதிகபட்சம் 1994ல் ‘ரவுண்டு–16’ சுற்றுக்கு முன்னேறியது. இம்முறை ஜுவான் ஆன்டனியோ பயிற்சியாளர் ஆன பிறகு சிறப்பாக செயல்படத் துவங்கி விட்டது. பிஜ்ஜி, சலீம், ஷேக்ரி என மூவரும் தாக்குதல் பணியில் மிரட்டுவர். ரஷ்ய அணியின் எவ்வித தற்காப்பு பகுதியையும் இவர்கள் தகர்க்கலாம் என நம்பப்படுகிறது. 

இந்த அணியின் தற்காப்பு பார்க்க வலுவானதாக உள்ளது. எனினும் உலக கோப்பை போன்ற தொடரில் சிறந்த அணிகளுக்கு எதிராக தாக்குப்பிடிப்பது சிரமம் தான்.

துவக்க விழா

முதல் போட்டிக்கு முன் 30 நிமிடம் துவக்க விழா நடக்கிறது. இந்திய நேரப்படி இன்று மாலை 6:30 மணிக்கு துவங்கும் விழாவில் நடன கலைஞர்கள், ஜிம்னாஸ்டிக்ஸ் சாகச நட்சத்திரங்கள் உட்பட 500 பேர் பங்கேற்கின்றனர்.

அதிகாரபூர்வ பாடல் ‘லைவ் இட் அப்...’ஐ, வில் ஸ்மித், நிக்கி ஜாம் இணைந்து பாட உள்ளனர். இங்கிலாந்தின் பிரபல பாடகர் ராபியே வில்லியம்ஸ், 44, ரஷ்யாவின் அய்டா கரிபுல்லினா, 30, கலக்க உள்ளனர். பிரேசில் அணியின் முன்னாள் வீரர் ரொனால்டோ, ஜெர்மனியின் ஓய்வு பெற்ற மத்தாயஸ் பங்கேற்கின்றனர். முடிவில் வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன.

24 லட்சம் டிக்கெட்

ரஷ்யாவில் நடக்கவுள்ள 64 உலக கோப்பை போட்டிகளை காண இதுவரை 24 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை ஆகியுள்ளன. இதில் ரஷ்யாவில் மட்டும் 8,71,797 லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. 

போட்டி நேரம்

உலக கோப்பை லீக் போட்டிகள் இந்திய நேரப்படி மாலை 3:30, 5:30, 6:30, 8:30, 9:30, 10:30, 11:30 மணி என பல நேரங்களில் துவங்குகின்றன. ‘ரவுண்டு–16’, காலிறுதி, அரையிறுதி போட்டிகள் இரவு 7:30, 11:30 மணிக்கு ஆரம்பம் ஆகின்றன. பைனல் ஜூலை 15ல் 8:30 மணிக்கு துவங்கும்.

ரூ. 70,502

உலக கோப்பை தொடரின் குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ. 6,710. அதிகபட்சம் ரூ. 70,502 வரை விற்கப்படுகின்றன.

Advertisement

இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா , நான்காவது ஒரு நாள் ஆட்டம்
இங்கிலாந்தில் ஆஸ்திரேலியா, 5 ஓடிஐ தொடர்கள், 2018
6/21/2018 , 18:30
ரிவர்ஸைட் க்ரெளண்ட், செஸ்ட்டர்-லி-ஸ்ட்ரீட்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்
Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?