Advertisement


‘பிபா’ உலக கோப்பை விருதுகள்

ஜூன் 13, 2018.
 Comments  
 


FIFA World Cup Soccer, Awards, Golden Ball, Golden Foot, Golden Gloves
 

 ‘கோல்டன் பூட்’

உலக கோப்பை கால்பந்து தொடரில் அதிக கோல் அடித்தவருக்கு ‘கோல்டன் பூட்’ விருது வழங்கப்படும். கடந்த 1930 முதல் 1978 வரை இவ்விருது வழங்கப்படவில்லை. கடந்த 1982ல் முதன்முறையாக ‘கோல்டன் ஷூ’ என்ற பெயரில் வழங்கப்பட்ட இவ்விருது, 2010 முதல் ‘கோல்டன் பூட்’ என அழைக்கப்படுகிறது.

கடந்த 1982ல் இத்தாலி வீரர் பாலோ ரோசி (6 கோல்), முதன்முறையாக ‘கோல்டன் ஷூ’ விருது வென்றார். கடந்த 2010ல் ஜெர்மனியின் தாமஸ் முல்லர் (5 கோல்), முதன்முறையாக ‘கோல்டன் பூட்’ விருதை கைப்பற்றினார்.

 

‘கோல்டன் பால்’

உலக கோப்பை கால்பந்து தொடரில், சிறப்பாக செயல்படும் வீரருக்கு ‘கோல்டன் பால்’ விருது வழங்கப்படும். கடந்த 1982ல் நடந்த உலக கோப்பை தொடரில் முதன்முறையாக இவ்விருது அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு முன் (1930–78), சிறந்த வீரர் மட்டும் தேர்வு செய்யப்படுவர். கடந்த 1982ல் இத்தாலியின் பாலோ ரோசி, முதன்முறையாக இவ்விருதை வென்றார். கடந்த 2014ல் அர்ஜென்டினாவின் மெஸ்சி இவ்விருதை கைப்பற்றினார்.

‘கோல்டன் கிளவுஸ்’

உலக கோப்பை தொடரில் சிறந்த கோல்கீப்பருக்கு ‘கோல்டன் கிளவுஸ்’ விருது வழங்கப்படும். கடந்த 1994ல் முதன்முறையாக வழங்கப்பட்ட இவ்விருது, ‘யாஷின்’ விருது என அழைக்கப்பட்டது. பின், 2010 முதல் ‘கோல்டன் கிளவுஸ்’ என்ற பெயரில் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 1994ல் ‘யாஷின்’ விருதை பெல்ஜியத்தின் மைக்கேல் பிரூடுஹோம்மே வென்றார். கடந்த 2010ல் ‘கோல்டன் கிளவுஸ்’ விருதை ஸ்பெயினின் இகர் கேசிலாஸ் கைப்பற்றினர். கடந்த 2014ல் ஜெர்மனி கோல்கீப்பர் மானுவல் நுாயர் இவ்விருது வென்றார்.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?