Advertisement


ஜொலிக்கும் உலக கோப்பை

ஜூன் 13, 2018.
 Comments  
 


FIFA World Cup, Football
 

கடந்த 1930 முதல் உலக கோப்பை தொடரில் கோப்பை வெல்லும் அணிக்கு 'ஜூல்ஸ் ரிம்மட்' கோப்பை வழங்கப்பட்டு வந்தது. 1970ல் பிரேசில் அணி 3வது முறையாக கோப்பை வென்றதால், 'ஜூல்ஸ் ரிம்மட்' டிராபி சொந்தமானது. இதனால், 1974ல் நடந்த 10வது உலக கோப்பை தொடரில், புதிய கோப்பை உருவாக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மொத்தம் 7 நாடுகளில் இருந்து 53 'டிசைன்கள்' அனுப்பப்பட்டன. கடைசியில், இத்தாலிய ஓவிய கலைஞர் சில்வியோ கஜானிகாவின் 'டிசைன்' தேர்வானது. மொத்தம் 18 காரட் தங்கத்தினால் ஆன இந்தக் கோப்பை 36.8 செ.மீ., உயரம், 6.175 கி.கி., எடை கொண்டது. அடிப்பகுதி இரண்டு அடுக்குகளை கொண்டது. 1974 ல் இருந்து கோப்பை வென்ற அணிகளின் பெயர் இதில் பொறிக்கப்பட்டு இருக்கும். 2042 வரை கோப்பை (17 தொடர்கள்) வெல்லும் அணிகளின் பெயர்கள் பொறிக்க, இதில் இடம் உள்ளது. இதன் பின் புதிய கோப்பை தயாரிக்கப்பட வேண்டும். சாம்பியன் அணிகளுக்கு, சொந்தமாக வைத்துக்கொள்ள, இந்த கோப்பையின் மாதிரி மட்டும்தான் தற்போது தரப்படுகிறது.

ரூ. 2,698 கோடி

உலக கோப்பை தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ. 2,698 கோடி. சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு கோப்பையுடன் ரூ. 256 கோடி பணம் கிடைக்கும். இது 2014 ஐ விட ரூ. 20 கோடி அதிகம். பைனலில் தோற்கும் அணி ரூ. 189 கோடி பெறும்.

* மூன்றாவது இடம் பெற்றால் ரூ. 162 கோடி, நான்காவது இடத்துக்கு ரூ. 148 கோடி பரிசுத் தொகை தரப்படும்.

* காலிறுதியில் தோற்கும் நான்கு அணிகளுக்கு தலா ரூ. 108 கோடி கிடைக்கும். 

* ‘ரவுண்டு–16’ சுற்றுடன் நடையை கட்டும் அணிகளுக்கு தலா ரூ. 81 கோடி தரப்படும். 

* லீக் சுற்றுடன் வெ ளியேறும் அணிகளுக்கு தலா ரூ. 54 கோடி கொடுக்கப்படும்.

‘ஜபிவாகா’

ரஷ்யாவில் உள்ள ஓநாய் உலக கோப்பை தொடரின் அதிகாரப்பூர்வ சின்னமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஓட்டெடுப்பு நடந்தது போது, 53 சதவீத வாக்குகள் பெற்ற ‘ஜபிவாகா’ தேர்வானது. ரஷ்ய மொழியில் ‘சிறப்பான முறையில் செயல்படுபவர்’ என இதற்கு பொருள்.

Advertisement

இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா , நான்காவது ஒரு நாள் ஆட்டம்
இங்கிலாந்தில் ஆஸ்திரேலியா, 5 ஓடிஐ தொடர்கள், 2018
6/21/2018 , 18:30
ரிவர்ஸைட் க்ரெளண்ட், செஸ்ட்டர்-லி-ஸ்ட்ரீட்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?