Advertisement


ரஷ்யாவில் உலக கால்பந்து திருவிழா

ஜூன் 13, 2018.
 Comments [1]  
 


FIFA World Cup Soccer 2018, Russia
 

மாஸ்கோ: பூமி பந்தின் ஒட்டுமொத்த பார்வையும் அடுத்த ஒரு மாதத்திற்கு ரஷ்யாவை நோக்கியே இருக்கும். இங்கு தான் உலக கோப்பை கால்பந்து திருவிழா இன்று கோலாகலமாக ஆரம்பமாகிறது. ‘நடப்பு சாம்பியன்’ ஜெர்மனி மீண்டும் அசத்துமா, மெஸ்சியின் அர்ஜென்டினா சாதிக்குமா, ரொனால்டோவின் போர்ச்சுகல் வரலாறு படைக்குமா, நெய்மரின் பிரேசில் எழுச்சி பெறுமா என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதில், சாம்பியன் பட்டம் வெல்லும் அணி, உலக கால்பந்து அரங்கின் வல்லரசாக வலம் வரலாம்.

ரஷ்யாவில் 21வது ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் இன்று துவங்குகிறது. 11 நகரங்கள், 12 மைதானங்கள், 32 நாட்கள், 32 அணிகள், 64 போட்டிகள் என ஒரு மாதத்துக்கு கால்பந்து ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். 

‘நம்பர்–1’ ஜெர்மனி: உலகத் தரவரிசையில் ‘நம்பர்–1’ ஆக இருக்கும் ஜெர்மனி, வலிமையான வீரர்களுடன் மீண்டும் சாதிக்கும் என நம்பப்படுகிறது. டோனி குரூஸ், சமி கெடிரா, ஆசில், தாமஸ் முல்லர் இருப்பது அணியின் பலம்.  கடந்த முறை கேப்டன் பதவியில் அசத்திய ஸ்கீவன்ஸ்டீகர், பிலிப் லாம் உள்ளிட்ட அனுபவ வீரர்கள் இல்லாதது பலவீனம். 

‘முதல்’ கிடைக்குமா: உலகின் அஞ்சத்தக்க தாக்குதல் வீரர்களை கொண்ட அணி அர்ஜெர்டினா (‘நம்பர்–5’). ஆனால் ஒருங்கிணைந்து செயல்படுவதில் சொதப்பி விடுகின்றனர். உலகின் சிறந்த வீரர் மெஸ்சி கேப்டனாக இருப்பது பலம். இவருக்கு துணையாக அகுயரோ, ஹிகுவேன், ஏஞ்சல் டி மரியா உள்ளனர். பின் பகுதியில் பெடரிகோ, நிகோலஸ் தன்னம்பிக்கையுடன் செயல்படுவது முக்கியம்.

2014 உலக கோப்பை, 2015, 2016ல் கோபா அமெரிக்கா என மூன்று முக்கிய தொடர்களின் பைனலுக்கு முன்னேறிய போதும் ஒன்றில் கூட கோப்பை வெல்லாதது மெஸ்சிக்கு சோதனை தான். முதல் கோப்பை வென்று தருவாரா என பொறுத்திருந்து காணலாம்.

நெய்மர் நம்பிக்கை: ஐந்து முறை உலக சாம்பியன் பிரேசில், கடந்த முறை(2014) சொந்தமண்ணில் ஜெர்மனியிடம் 1–7 என தோற்றது. இம்முறை  பரிகாரம் தேட முயற்சிக்கலாம். காயத்தில் இருந்த மீண்ட இளம் முன்னணி வீரர் நெய்மர் இதற்கு ‘கால்’ கொடுக்கலாம். 

பிலிப்பே கவுட்டினோ, வில்லியன், கேபிரியஸ் ஜீசஸ், ‘லெப்ட் பேக்’ பகுதியில் அசத்தும் மார்செலோ இருப்பது நம்பிக்கை தரும்.  டேனி ஆல்வ்ஸ் காயத்தால் விலகியது பெரும் பலவீனம். 

போர்ச்சுகல் எப்படி: யூரோ கோப்பை சாம்பியன் போர்ச்சுகல் அணிக்கு கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ தான் பலம். அனுபவ வீரர்களான பெர்னாண்டோ சில்வா, ஆன்ட்ரி சில்வா உதவலாம். மத்திய பகுதியில் பெபேவை மட்டும் அதிகம் நம்ப வேண்டும். புருனோ ஆல்வ்ஸ், ஜோஸ் பான்ட்டே ‘பார்மில்’ இல்லாதது ஏமாற்றம்.

ஸ்பெயின் எதிர்பார்ப்பு: கடந்த முறை லீக் சுற்றுடன் திரும்பியது ஸ்பெயின். தற்போது புதிய பயிற்சியாளர் ஜுலென் தலைமையில் பெரிய எதிர்பார்ப்புடன் களமிறங்குகிறது. இனியஸ்டா, டேவிட் சில்வா என வலிமையான வீரர்களைக் கொண்டது. டேவிட் வில்லா, டீகோ கோஸ்டா ‘பினிஷிங்’ செய்ய தடுமாறுகின்றனர். 

தவிர சாரஸ் இடம் பெற்ற உருகுவே, கிரீஸ்மானின் பிரான்ஸ், சொந்தமண்ணில் களமிறங்கும் ரஷ்யா, ஈரான், கொலம்பியா உள்ளிட்ட அணிகளும் சவால் தரலாம்.

32 அணிகள்

உலக கோப்பை கால்பந்து தொடரில் இம்முறை பங்கேற்கவுள்ள 32 அணிகள்:

பிரிவு ‘ஏ’

ரஷ்யா

சவுதி அரேபியா

எகிப்து

உருகுவே

பிரிவு ‘பி’

போர்ச்சுகல்

ஸ்பெயின்

மொராக்கோ

ஈரான்

பிரிவு ‘சி’

பிரான்ஸ்

ஆஸ்திரேலியா

பெரு

டென்மார்க்

பிரிவு ‘டி’

அர்ஜென்டினா

ஐஸ்லாந்து

குரோஷியா

நைஜீரியா

பிரிவு ‘இ’

பிரேசில்

சுவிட்சர்லாந்து

கோஸ்டா ரிகா

செர்பியா

பிரிவு ‘எப்’

ஜெர்மனி

மெக்சிகோ

சுவீடன்

தென் கொரியா

பிரிவு ‘ஜி’

பெல்ஜியம்

பனாமா

துனிசியா

இங்கிலாந்து

பிரிவு ‘எச்’

போலந்து

செனகல்

கொலம்பியா

ஜப்பான்

‘குரூப் ஆப் டெத்’

ரஷ்யா உலக கோப்பை தொடரில் கடினமான அணிகள் இடம் பெற்றுள்ள ‘இ’ பிரிவு, ‘குரூப் ஆப் டெத்’ என்றழைக்கப்படுகிறது. பிரேசில் (2,131 புள்ளி), சுவிட்சர்லாந்து (1,879), செர்பியா (1,770), கோஸ்டாரிகா (1,745) அணிகளின் தரவரிசை புள்ளிகள் சராசரி 1,881 ஆக உள்ளது.

736 வீரர்கள்

ஒவ்வொரு அணியிலும் 23 பேர் இடம் பெற்றிருப்பர். மொத்தம் பங்கேற்கும் வீரர்களின் எண்ணிக்கை 736 ஆக உள்ளது. 

3,35,000 மக்கள்

உலக கோப்பை தொடரில் களமிறங்கும் குறைந்த மக்கள் தொகை கொண்ட அணி ஐஸ்லாந்து. இங்கு மொத்த மக்கள் தொகை 3,35,000 பேர் தான். இதற்கு முன் 2006ல் டிரினிடாட் அண்டு டுபாகோ அணி (13,00,000 பேர்) இந்த பெருமை பெற்றிருந்தது.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
HASAN ALI MALIMAR one week ago | Report abuse
வர வேற்கிறோம். உலக கோப்பை கால்பந்து விளையாட்டை. வருக, வெல்க,. செல்க.




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?