Advertisement


இந்தியாவை சமாளிக்குமா ஆப்கன்: பெங்களூரு டெஸ்ட் இன்று ஆரம்பம்

ஜூன் 13, 2018.
 Comments  
 


India, Afghanistan, Test Cricket, Bengaluru
 

பெங்களூரு: இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் இன்று துவங்குகிறது. இதில் உலகின் ‘நம்பர்–1’ இந்திய அணி, அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சுலபமாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் அணி, ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இது, ஆப்கானிஸ்தான் அணி பங்கேற்கும் முதலாவது டெஸ்ட். இப்போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இன்று துவங்குகிறது.

ராகுல் நம்பிக்கை: இந்திய அணியின் ‘ரெகுலர்’ கேப்டன் விராத் கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் ரகானே அணியை வழிநடத்துகிறார். துவக்க வீரராக முரளி விஜய் அல்லது ஷிகர் தவானுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா, இலங்கைக்கு எதிரான டெஸ்டில் 9 அரைசதமடித்திருந்த லோகேஷ் ராகுல், இந்த ஆண்டு தென் ஆப்ரிக்காவில் நடந்த டெஸ்ட் தொடரில் 30 ரன் மட்டுமே எடுத்திருந்தார். ஆனால் சமீபத்திய ஐ.பி.எல்., தொடரில் ரன் மழை (659 ரன்) பொழிந்த இவர், மற்றொரு துவக்க வீரராக களமிறக்கப்படலாம். கோஹ்லி இடத்தில் கருண் நாயர் விளையாடலாம். ‘டாப்–ஆர்டரில்’ புஜாரா, கேப்டன் ரகானே, ‘மிடில்–ஆர்டரில்’ தினேஷ் கார்த்திக் கைகொடுத்தால் நல்ல ஸ்கோரை பெறலாம்.

உமேஷ் வாய்ப்பு: முகமது ஷமிக்கு பதிலாக தேர்வான நவ்தீப் சைனிக்கு இடம் கிடைப்பது சந்தேகம். எனவே வேகப்பந்துவீச்சில் இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் இணைந்து அசத்தலாம். இவர்களுக்கு ‘ஆல்–ரவுண்டர்’ ஹர்திக் பாண்ட்யா கைகொடுத்தால் நல்லது. ‘சுழலில்’ அனுபவ அஷ்வின், ரவிந்திர ஜடேஜா கூட்டணி கலக்கலாம். இதனால் குல்தீப் யாதவ் இடம் கேள்விக்குறிதான்.

முதல் டெஸ்ட்: முதன்முறையாக டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு ‘பேட்டிங்’ தான் பலவீனமாக உள்ளது. சமீபத்தில் முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் வழங்கிய ஆலோசனைகள் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு எப்படி கைகொடுக்கப் போகிறது என்பதை போட்டியில் தான் காண முடியும். துவக்க வீரராக முகமது ஷாஜத், ஜாவத் அகமதி களமிறங்கலாம். ரஹ்மத் ஷா, கேப்டன் ஸ்டானிக்ஜாய் கைகொடுத்தால் நல்லது. ‘ஆல்–ரவுண்டர்’ முகமது நபி ஆறுதல் தரலாம்.

ரஷித் பலம்: ஆப்கானிஸ்தானின் மிகப் பெரிய பலம் பந்துவீச்சு. ‘சுழலில்’ ரஷித் கான், முகமது நபி, இந்திய பேட்ஸ்மேன்களுக்கு தொல்லை தரலாம். சமீபத்திய ஐ.பி.எல்., தொடரில் ‘சுழல் ஜாலம்’ காட்டிய ரஷித், விக்கெட் வேட்டை நடத்தலாம். எனவே இவரது பந்துவீச்சை இந்திய பேட்ஸ்மேன்கள் கவனமாக கையாள வேண்டும். ஒருமுறை கூட நான்கு நாள் போட்டியில் விளையாடாத முஜீப், 17, ஐ.பி.எல்., தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடினார். எனவே இவர், இந்திய வீரர்களின் பலம், பலவீனம் குறிந்து நன்று அறிந்திருப்பார்.

இந்த டெஸ்ட் இந்திய பேட்ஸ்மேன்களுக்கும், ஆப்கானிஸ்தான் பவுலர்களுக்கும் இடையிலான போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3 முறை

டெஸ்ட் போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் முதன்முறையாக மோதவுள்ளன. ஆனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடிய ஒரு ஒருநாள் மற்றும் 2 ‘டுவென்டி–20‘ போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

மழை வருமா

பெங்களூருவில் இன்றைய வெப்பநிலை குறைந்தபட்சம் 20, அதிகபட்சம் 27 டிகிரி செல்சியசாக இருக்கும். மழை வர 60 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஆடுகளம் எப்படி

நேற்று பெய்த லேசான மழையால் பெங்களூரு, சின்னசாமி மைதானத்தின் ஒரு சில பகுதிகள் பாதிக்கப்பட்டன. ‘பிட்சில்’ ஆங்காங்கே புற்கள் காணப்படுவதால் இன்று ஈரப்பதத்துடன் இருக்கும். மூன்றாம் நாளில் ஆடுகளத்தின் தன்மை மாறக்கூடும் என்பதால், பவுலர்கள் சாதிக்க வாய்ப்பு உள்ளது.

தவான் சந்தேகம்

சீனியர் துவக்க வீரர் ஷிகர் தவான், வலைப்பயிற்சியை புறக்கணித்ததாக கூறபப்டுகிறது. ஒருவேளை காயத்தால் பயிற்சி மேற்கொள்ளாமல் இருந்திருந்தால், இப்போட்டியில் இவர் விளையாடுவது சந்தேகம். இதனால் முரளி விஜய்–லோகேஷ் ராகுல் ஜோடி துவக்கம் தரலாம்.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்
Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?