Advertisement


2026 உலக கோப்பை எங்கே?

ஜூன் 13, 2018.
 Comments  
 


FIFA World Cup 2026, Soccer, Hosting Rights, USA, Mexico, Canada
 

மாஸ்கோ: அமெரிக்கா, மெக்சிகோ, கனடா நாடுகள் இணைந்து வரும் 2026ல் உலக கோப்பை கால்பந்து தொடரை நடத்தவுள்ளன.

‘பிபா’ சார்பில் வரும் 2026ல், 23வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கவுள்ளது. இத்தொடரை நடத்த மொராக்கோ விருப்பம் தெரிவித்திருந்தது. இதேபோல வட அமெரிக்க நாடுகளான அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஒருங்கிணைந்து நடத்த விரும்பின.

இதற்கான ஓட்டெடுப்பு, மாஸ்கோவில் நடந்த ‘பிபா’ கூட்டத்தில் நடத்தப்பட்டது. இதில் 134 வாக்குகளை பெற்ற வட  அமெரிக்க நாடுகளுக்கு தொடரை நடத்தும் உரிமம் வழங்கப்பட்டது. மொராக்கோ அணிக்கு 65 வாக்குகளே கிடைத்தன. இதன்மூலம் முதன்முறையாக 3 நாடுகள் இணைந்து உலக கோப்பை தொடரை நடத்தவுள்ளன. இதற்கு முன், 2002ல் தென் கொரியா மற்றும் ஜப்பான் என, 2 நாடுகள் இணைந்து நடத்தின. தவிர, 1994க்கு பின் வட அமெரிக்காவில் உலக கோப்பை தொடர் நடக்கவுள்ளது. கடைசியாக அமெரிக்காவில் 1994ல் நடந்தது.

வரும் 2026ல் நடக்கவுள்ள உலக கோப்பையில் முதன்முறையாக 48 அணிகள் பங்கேற்கவுள்ளன.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?