Advertisement


நியூசி., வீராங்கனை சாதனை

ஜூன் 13, 2018.
 Comments  
 


New Zealand, Ireland, Amelia Kerr, One Day Cricket, Highest Run in One Innings
 

டப்ளின்: அயர்லாந்துக்கு எதிராக 232 ரன்கள் எடுத்த நியூசிலாந்தின் அமிலியா கெர், ஒருநாள் போட்டியில், ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற புதிய சாதனை படைத்தார்.

அயர்லாந்து சென்ற நியூசிலாந்து பெண்கள் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் வென்ற நியூசிலாந்து அணி, 2–0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி டப்ளினில் நடந்தது.

‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த நியூசிலாந்து அணிக்கு அமி சாட்டர்த்வைட் (61) நல்ல துவக்கம் தந்தார். லெய்க் காஸ்பெரக் (113) சதம் கடந்து நம்பிக்கை தந்தார். அபாரமாக ஆடிய அமிலியா கெர், 145 பந்தில் 232 ரன்கள் (2 சிக்சர், 31 பவுண்டரி) குவித்து அவுட்டாகாமல் இருந்தார். நியூசிலாந்து அணி, 50 ஓவரில், 3 விக்கெட்டுக்கு, 440 ரன்கள் எடுத்தது.

புதிய சாதனை

இப்போட்டியில் 232 ரன்கள் எடுத்த நியூசிலாந்தின் அமிலியார் கெர், ஒருநாள் போட்டி வரலாற்றில், ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனைகள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் பெலிண்டா கிளார்க்கை முந்தி முதலிடம் பிடித்தார். இதற்கு முன், கடந்த 1997ல் டென்மார்க் அணிக்கு எதிராக மும்பையில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் பெலிண்டா கிளார்க், 229 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தது, சாதனையாக இருந்தது.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?