Advertisement


மெஸ்சி, நெய்மருக்கு ‘மவுசு’

ஜூன் 12, 2018.
 Comments  
 


neymar
 

புரோனிஸ்டி: ரஷ்யாவில் உலக கோப்பை கால்பந்துக்கு தயாராகி வரும் மெஸ்சி, நெய்மரின் பயிற்சியை காண ரசிகர்கள் குவிந்தனர்

ரஷ்யாவில் நாளை ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் துவங்குகிறது. இதில் போர்ச்சுகல், பிரான்ஸ் உள்ளிட்ட 32 அணிகள் பங்கேற்கின்றன. இம்முறை, ‘டி’ பிரிவில் இடம்பெற்றுள்ள மெஸ்சியின் அர்ஜென்டினா அணி கோப்பை வெல்லும் முனைப்பில் உள்ளது. அர்ஜென்டினா அணி தனது (ஜூன் 16) முதல் லீக் போட்டியில் ஐஸ்லாந்து அணியை எதிர் கொள்கிறது.

இதற்கிடையே, மாஸ்கோவில் உள்ள புரோனிஸ்டி பகுதியில் அர்ஜென்டினா அணியினர் பயிற்சியில் ஈடுபட்டனர். நட்சத்திர வீரரான மெஸ்சியை பார்க்க, அர்ஜென்டினாவின் தேசியக்கொடியுடன் சுமார் 400க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கூடி விட்டனர். ‘மெஸ்சி... மெஸ்சி...’ என உற்சாக குரல் எழுப்பினர். இவரிடம் ஆட்டோகிராப் வாங்க பலர் முயற்சி செய்தனர்.

இதேபோல 5 முறை கோப்பை வென்றுள்ள பிரேசில் அணியினரும் பயிற்சியில் ஈடுபட்டனர். சோச்சி நகருக்கு அருகே உள்ள யோக் ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் நட்சத்திர வீரரான நெய்மர் உள்ளிட்டோர் பயிற்சி செய்தனர். ரஷ்யாவில் செவ்வாய்கிழமை விடுமுறை தினம் என்பதால், இதைப்பார்க்க சுமார் 5 ஆயிரம் ரசிகர்கள் கூடிவிட்டனர். பலத்த பாதுகாப்பையும் தாண்டி, இளம் ரசிகர் ஒருவர் வீரர்களை நெருங்கிவிட்டார். பின், ‘செல்பி’ எடுக்க வற்புறுத்தினார்.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?