Advertisement


எங்களுக்கு எலும்பு தான்: ஹாக்கி பயிற்சியாளர் வேதனை

ஜூன் 12, 2018.
 Comments  
 


Harendra singh
 

புதுடில்லி: ‘‘பெங்களூரு இந்திய விளையாட்டு ஆணைய (எஸ்.ஏ.ஐ.,) பயிற்சி முகாமில் வீரர்களுக்கு வழங்கப்படும் இறைச்சி உணவில் அதிகமாக எலும்புகள் தான் உள்ளன. உணவில் முடி, பூச்சிகள் காணப்படுகின்றன,’’ என இந்திய ஹாக்கி பயிற்சியாளர் ஹரேந்திரா சிங் தெரிவித்தார்.

நெதர்லாந்தின் பிரீடா நகரில் வரும் 23ம் தேதி ஆண்களுக்கான சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் துவங்குகிறது. இதில் இந்தியா, ‘நடப்பு சாம்பியன்’ ஆஸ்திரேலியா உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் (ஜூன் 23) பாகிஸ்தானுடன் மோதுகிறது. இதில் சாதிக்க இந்திய வீரர்கள் பெங்களூருவில் உள்ள எஸ்.ஏ.ஐ., முகாமில் பயிற்சி பெறுகின்றனர்.

சமீபத்தில் 48 வீரர்களுக்கும் எடுக்கப்பட்ட சோதனையில் உணவு தொடர்பான குறைபாடுகள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பயிற்சியாளர் ஹரேந்திரா சிங் எழுதிய கடிதத்தில்,‘பெங்களூரு மையத்தின் சமையல் அறையில் கரப்பான் பூச்சிகள் உள்ளன. உணவுகளில் பூச்சிகள், முடிகள் காணப்படுகின்றன. இறைச்சி உணவில் அதிகமான எலும்புகள் தான் உள்ளன. ஊட்டச்சத்தான உணவுகள் வழங்கப்படவில்லை,’ என, தெரிவித்திருந்தார்.

சிக்கல் தீரும்:எஸ்.ஏ.ஐ., இயக்குனர் நீலம் கபூர் வெளியிட்ட அறிக்கையில்,‘ பெங்களூரு பயிற்சி மையத்தில் வழங்கப்படும் உணவுகள் சுகாதாரமாக இல்லை என புகார் கிடைத்துள்ளது. ஏற்கனவே, கடந்த மார்ச்சில் இங்கு சென்ற மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தனும் அதிருப்தி தெரிவித்திருந்தார். இந்த பிரச்னை குறித்து விசாரிக்கப்பட்டு நிச்சயமாக சரி செய்யப்படும். வீரர், வீராங்கனைகளின் உணவு விஷயத்திற்கு அதிக முக்கியத்துவம் தரப்படும். ஒவ்வொரு மண்டலத்தில் உள்ள பயிற்சி முகாமில் தரமான உணவு வழங்கப்படுவதை அந்தந்த இயக்குனர்கள் உறுதி செய்ய வேண்டும்,’  என தெரிவித்துள்ளார்.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?