Advertisement


தங்கமான தருணம்: கார்த்திக் உறுதி

ஜூன் 12, 2018.
 Comments  
 


Dinesh Karthik
 

பெங்களூரு: ‘‘எனது இடத்தை சாதாரண வீரர்களிடம் இழக்கவில்லை. சிறந்த கேப்டனான தோனியிடம் தான் இழந்தேன். டெஸ்ட் அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. முடிந்தவரை சிறப்பாக செயல்படுவேன்,’’ என தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.

இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடக்கிறது. சர்வதேச டெஸ்ட் அந்தஸ்து பெற்ற பின் முதன் முறையாக களமிறங்குகிறது ஆப்கானிஸ்தான். இதற்கான இந்திய அணியில் ஒரு வழியாக இடம் பெற்றார் தமிழக விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக். கேப்டன் தோனியின் வருகை, இவரது ஓய்வுக்குப் பின் (2014) சகா தேர்வாக, தினேஷ் கார்த்திக் டெஸ்ட் அணியில் இடம் பெற முடியாமல் தவித்தார். சமீபத்தில் சகாவுக்கு காயம் ஏற்பட, 2010க்குப் பின் 8 ஆண்டுகள் கழித்து நாளை துவங்கும் ஆப்கானிஸ்தான் டெஸ்டில் களமிறங்குகிறார்.

தினேஷ் கார்த்திக் கூறியது: அதிக போட்டிகள் நிறைந்தது இந்திய கிரிக்கெட் உலகம். இதில் டெஸ்ட் அணியில் இடம் பெறுவது அவ்வளவு எளிதல்ல. இவ்வகை போட்டிக்கு ஏற்றபடி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை நான் வெளிப்படுத்தவில்லை. இதனால் தான் எனக்கு இடம் கிடைக்காமல் இருந்தது. மீண்டும் இடம் பெற வேண்டும் என தொடர்ந்து கனவு கண்டேன். ஆனால் தோனி எனக்கு கடும் போட்டியாளராக திகழ்ந்தார். இந்தியாவில் இருந்து உருவான மிகச்சிறந்த கேப்டன்களில் தோனியும் ஒருவர். இவர் அளவுக்கு நான் விளையாடவில்லை என்று தான் நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் டெஸ்ட் அணியில் எனது இடத்தை சாதாரண வீரரிடம் இழக்கவில்லை. சிறந்த  கேப்டனான தோனியிடம் தான் இழந்தேன்.

சிறப்பாக செயல்படுவேன்

நீண்ட இடைவெளிக்குப் பின் டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளேன். மீண்டும் எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. முடிந்தவரை சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன். அதேநேரம் இடத்தை தக்கவைப்பது எப்படி என்பது குறித்து அதிகமாக யோசித்து கூடுதல் நெருக்கடி ஏற்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. இந்திய அணியில் உள்ள அஷ்வின், ஜடேஜா அதிக அனுபவம் வாய்ந்தவர்கள். இந்த அனுபவத்தை அவ்வளவு எளிதாக எங்கும் வாங்கி விட முடியாது. இதனால் இந்த ஜோடி சிறப்பாக செயல்படும் என நம்புகிறேன்.

இவ்வாறு தினேஷ் கார்த்திக் கூறினார்.

87

நீண்ட இடைவெளிக்குப் பின் களமிறங்கும் இந்திய விக்கெட் கீப்பர்களில் தினேஷ் கார்த்திக் முதலிடம் பெறுகிறார். கடைசியாக 2010ல் வங்கதேச டெஸ்டில் விளையாடினார். மீண்டும் நாளை களமிறங்கும் நிலையில், இந்திய அணி 87 டெஸ்டில் விளையாடியுள்ளது. இதற்கு முன் பார்த்திவ் படேல் (83 டெஸ்ட் இடைவெளி) முதலிடத்தில் இருந்தார்.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?