Advertisement


உலக நாயகன் குளோஸ்

ஜூன் 12, 2018.
 Comments  
 


Miroslav Klose
 

ஜெர்மனி அணியின் சிறந்த முன்கள வீரர் மிராஸ்லாவ் குளோஸ், 40. கடந்த 2001ல் சர்வதேச கால்பந்து அரங்கில் அறிமுகமான இவர் ஜெர்மனிக்காக அதிக கோல்(137 போட்டி, 71 கோல்) அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

தென் கொரியாவில் 2002ல் நடந்த உலக கோப்பை தொடரில் முதன்முறையாக பங்கேற்ற இவர், 5 கோல்கள் அடித்து அணியை பைனலுக்கு அழைத்து சென்றார். சொந்த மண்ணில் 2006ல் நடந்த உலக கோப்பையில் அதிகபட்சமாக 5 கோல்கள் அடித்து ‘கோல்டன் ஷூ’ விருது வென்றார்.

தென் ஆப்ரிக்காவில் 2010ல் நடந்த உலக கோப்பையில் மூன்றாவது முறையாக பங்கேற்ற இவர், 4 கோல் அடித்தார். கடந்த 2014ல் (பிரேசில்) அதிக எதிர்பார்ப்புடன் நான்காவது முறையாக உலக கோப்பை தொடரில் களமிறங்கிய குளோஸ் 2 கோல் தான் அடித்தார்.

இருப்பினும் உலக கோப்பை அரங்கில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில், முன்னாள் பிரேசில் வீரர் ரொனால்டோவை (15 கோல்) முந்தி முதலிடத்தை பெற்ற குளோஸ் (16) புதிய சாதனை படைத்தார். இது ஜெர்மனி அணி நான்காவது முறையாக உலக கோப்பையை முத்தமிட உதவியது. இந்த திருப்தியுடன் சர்வதேச போட்டிகளிலிருந்து பிரியாவிடை பெற்றார் குளோஸ். கிளப் அணிகளை பொறுத்தவரை ஜெர்மனியை சேர்ந்த வெர்டர்  பிரீமென், பேயர்ன் முனிச் உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடி உள்ளார்.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?