Advertisement


உலக கால்பந்தில் அய்டா * துவக்க விழா எப்போது

ஜூன் 11, 2018.
 Comments  
 


FIFA World Cup, Robbie Williams to Perform at Opening Ceremony
 

மாஸ்கோ: உலக கோப்பை கால்பந்து துவக்கவிழாவில் அய்டா கரிபுல்லினா, ரொனால்டோ, ராபியே வில்லியம்ஸ் பங்கேற்று அசத்த உள்ளனர்.

‘பிபா’ உலக கோப்பை கால்பந்து ரஷ்யாவில் ஜூன் 14ல் துவங்குகிறது. நடப்பு சாம்பியன் ஜெர்மனி, அர்ஜென்டினா, பிரேசில் உட்பட மொத்தம் 32 அணிகள் எட்டு பிரிவுகளாக களமிறங்குகின்றன. முதல் போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள தொடரை நடத்தும் ரஷ்ய அணி, சவுதி அரேபியாவை சந்திக்கிறது.

லுஜ்னிகி மைதானத்தில் நடக்கும் இப்போட்டிக்கு முன் துவக்கவிழா நடக்கிறது. மொத்தம் 80,000 பேர் அமரும் வசதி கொண்ட இம்மைதானம் 1950ல் கட்டப்பட்டது. 1980ல் ஒலிம்பிக் போட்டி இங்கு நடந்தது. இந்திய நேரப்படி மாலை 6:30 மணிக்கு துவங்கும் விழாவில் நடன கலைஞர்கள், ஜிம்னாஸ்டிக்ஸ் சாகச நட்சத்திரங்கள் உட்பட 500 பேர் பங்கேற்க காத்திருக்கின்றனர்.

வில் ஸ்மித், நிக்கி ஜாம் இணைந்து ‘பிபா’ ரஷ்ய தொடரில் அதிகாரபூர்வ பாடலான ‘லைவ் இட் அப்...’ஐ அரங்கேற்ற உள்ளனர். இங்கிலாந்தின் பிரபல பாடகர் ராபியே வில்லியம்ஸ், 44, ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கிறார். அடுத்து ரஷ்ய இசைக்கலைஞர் அய்டா கரிபுல்லினா, 30, கலக்க உள்ளார்.

தவிர உலக கோப்பை வென்ற பிரேசில் அணியில் இரண்டு முறை இடம் பெற்ற முன்னாள் வீரர் ரொனால்டோவும் இதில் பங்கேற்கிறார். முடிவில் வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன.

ராபியே வில்லியம்ஸ் கூறுகையில்,‘‘ எனது வாழ்க்கையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். உலக கோப்பை துவக்கவிழாவில் 80,000 கால்பந்து ரசிகர்கள் முன் பங்கேற்க உள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது எனது சிறுவயது கனவு, மறக்க முடியாத வகையில் இருக்கும்,’’ என்றார்.


பயிற்சியில் ரொனால்டோ

உலக கோப்பை தொடருக்காக ரஷ்யா சென்றுள்ள போர்ச்சுகல் அணி பயிற்சியை துவக்கியது. வழக்கத்தை விட வானிலை மோசமாக இருந்த போதும் மழையை பொருட்படுத்தாமல் ரொனால்டோ உள்ளிட்டோர் பயிற்சியில் ஈடுபட்டனர். தவிர ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் வழங்கினார்.

 

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?