Advertisement


யூகி பாம்ப்ரி முன்னேற்றம்

ஜூன் 11, 2018.
 Comments  
 


ATP Tennis Ranking, Yuki Bhambri
 

புதுடில்லி: ஏ.டி.பி., டென்னிஸ் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் இந்திய வீரர் யூகி பாம்பரி, 84வது இடத்துக்கு முன்னேறினார்.

டென்னிஸ் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஏ.டி.பி., வெளியிட்டது. இதன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, 93வது இடத்தில் இருந்து 84வது இடத்துக்கு முன்னேறினார். இவர், சமீபத்தில் பாரிசில் நடந்த பிரெஞ்ச் ஓபனில் முதல் சுற்றோடு திரும்பிய போதும், இங்கிலாந்தில் நடந்த ஏ.டி.பி., சாலஞ்சர் தொடரில் காலிறுதி வரை சென்றார்.

‘லக்கி லுாசர்’ முறையில் பிரெஞ்ச் ஓபனில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்த மற்றொரு இந்திய வீரர் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன், 14 இடங்கள் முன்னேறி, முதன்முறையாக 169வது இடம் பிடித்தார். மற்ற இந்திய வீரர்களான ராம்குமார் ராமநாதன் (128வது இடம்), சுமித் நாகல் (234வது) பின்னடைவை சந்தித்தனர்.

இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, 22வது இடத்துக்கு முன்னேறினார். திவிஜ் சரண் (43வது இடம்), பயஸ் (39வது), புரவ் ராஜா (77வது) பின்தள்ளப்பட்டனர். மற்றொரு இந்திய வீரர் விஷ்ணு வர்தன், 99வது இடத்துக்கு முன்னேறினார்.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?