Advertisement


வில்லா விஸ்வரூபம்

ஜூன் 11, 2018.
 Comments  
 


David Villa, Spain, Football, FIFA World Cup Soccer
 

ஸ்பெயின் கால்பந்து அணியின் முன்னணி வீரர் டேவிட் வில்லா, 36. இவருக்கு இளம் வயதிலேயே சோதனை காத்திருந்தது. இவரது நான்காவது வயதில், வலது கால் தொடை எலும்பில் முறிவு ஏற்பட்டது. இவரது தந்தை ஜோஸ் மானுவல் வில்லாவின் உதவியால், காயத்தில் இருந்து மீண்டார்.

பின் 2006ல் ஜெர்மனியில் நடந்த உலக கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட இவர், உக்ரைனுக்கு எதிரான போட்டியில் 2 கோல் அடித்து வெற்றிக்கு வித்திட்டார். கடந்த 2008ல் ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்தில் நடந்த ‘யூரோ’ கோப்பையில் விளையாடிய இவர், அதிகபட்சமாக 4 கோல் அடித்து ஸ்பெயின் அணி 2வது முறையாக (1964, 2008) கோப்பை வெல்ல வித்திட்டார்.

கடந்த 2010ல் தென் ஆப்ரிக்காவில் நடந்த உலக கோப்பையிலும் இவரது அபார ஆட்டம் தொடர்ந்தது. மொத்தம் 5 கோல்கள் அடித்த இவர், ஸ்பெயின் அணி முதன்முறையாக உலக கோப்பை வெல்ல காரணமாக அமைந்தார். தொடர்ந்து மூன்றாவது முறையாக (2006, 2010, 2014) உலக கோப்பையில் விளையாடிய இவர், ஒரே ஒரு கோல் மட்டும் அடித்தார். இத்தொடரில் ஸ்பெயின் அணி முதல் சுற்றோடு திரும்பியது.

சர்வதேச கால்பந்து அரங்கில் 50 கோல் அடித்த முதல் ஸ்பெயின் வீரர் என்ற பெருமை பெற்ற டேவிட் வில்லா, 2014 உலக கோப்பை தொடருக்கு பின் ஓய்வை அறிவித்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓய்வு முடிவை திரும்ப பெற்றுக் கொண்டார். உலக கோப்பை தகுதிச் சுற்றில் இத்தாலி அணிக்கு எதிராக விளையாடிய இவர், பிரதான சுற்றில் விளையாட தேர்வு செய்யப்படவில்லை. இதுவரை ஸ்பெயின் அணிக்காக 98 போட்டியில், 59 கோல் அடித்துள்ளார்.

‘பிரீ கிக்’

கடந்த 2014ல் பிரேசிலில் நடந்த உலக கோப்பை தொடரில் பங்கேற்ற வீரர்களில் மிகவும் உயரமான வீரராக இங்கிலாந்தின் பிரேசர் பாஸ்டர் இருந்தார். இவரது உயரம் 6 அடி, 7 அங்குலம்.

* ஐந்து உலக கோப்பை தொடரில் பங்கேற்ற கோல் கீப்பர்கள் என்ற பெருமை ஜெர்மனியின் மத்தாயஸ், மெக்சிகோவின் கர்பஜால், இத்தாலியின் பபான் ஆகியோருக்கு உண்டு.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?