Advertisement


நியூசிலாந்து பெண்கள் அசத்தல்

ஜூன் 11, 2018.
 Comments  
 


New Zealand, Ireland, Women One Day Internatiional Cricket
 

டப்ளின்: அயர்லாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் அசத்திய நியூசிலாந்து பெண்கள் அணி, 306 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அயர்லாந்து சென்றுள்ள நியூசிலாந்து பெண்கள் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து வென்றது. இரண்டாவது போட்டி டப்ளினில் நடந்தது. ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த நியூசிலாந்து அணிக்கு சோபி டேவின் (108) நம்பிக்கை அளித்தார். மேடி கிரீன் (50), கேப்டன் சாட்டர்வைட்(48), அனா பீட்டர்சன் (46), பெர்ணான்டின் (43) கைகொடுத்தனர். நியூசிலாந்து அணி, 49.5 ஓவரில், 418 ரன்கள் குவித்தது.

கடின இலக்கை விரட்டிய அயர்லாந்து அணிக்கு கேப்டன் லாரா டெலானி (33), செசிலியா ஜாய்ஸ் (26) மட்டும் ஆறுதல் தந்தனர். மற்ற வீராங்கனைகள் ஏமாற்ற, அயர்லாந்து அணி, 35.3 ஓவரில், 112 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. இதன்மூலம் நியூசிலாந்து அணி 2–0 என தொடரை கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நாளை டப்ளினில் நடக்கவுள்ளது.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?