Advertisement


வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

ஜூன் 10, 2018.
 Comments  
 


West Indies, Sri Lanka, Test Cricket, Port Of Spain
 

போர்ட் ஆப் ஸ்பெயின்: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி, 226 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இலங்கை அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்தது. முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 414/8(‘டிக்ளேர்’), இலங்கை 185 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி, 7 விக்கெட்டுக்கு, 223 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. பின், 453 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய இலங்கை அணி, 4ம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுக்கு, 176 ரன்கள் எடுத்திருந்தது. குசால் மெண்டிஸ் (94), லகிரு காமகே (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

கடின இலக்கு: ஐந்தாம் நாள் ஆட்டத்தில் 2வது இன்னிங்சை தொடர்ந்த இலங்கை அணிக்கு குசால் மெண்டிஸ் (102) சதம் கடந்து கைகொடுத்தார். காமகே (3), கேப்டன் சண்டிமால் (27), டிக்வெல்லா (19) நிலைக்கவில்லை. ஹெராத் ‘டக்–அவுட்’ ஆனார். சேஸ் பந்தில் லக்மல் (1), லகிரு குமாரா (0) அவுட்டாகினர்.

இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி, 226 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்டாகி’ தோல்வியடைந்தது. தில்ருவான் பெரேரா (3) அவுட்டாகாமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ராஸ்டன் சேஸ் 4, தேவேந்திர பிஷூ 3 விக்கெட் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின்மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி, 1–0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது டெஸ்ட் வரும் 14ல் கிராஸ் இஸ்லட்டில் துவங்குகிறது.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?