Advertisement


சுனில் செத்ரி ‘மேஜிக்’: இந்திய அணி சாம்பியன்

ஜூன் 10, 2018.
 Comments [4]  
 


Intercontinental Cup Soccer, India, Champion, Sunil Chhetri, Final, Kenya
 

மும்பை: ‘இன்டர்கான்டினென்டல்’கோப்பை கால்பந்து தொடரில் அசத்திய இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. பைனலில் கென்யாவை 2–0 என வீழ்த்தியது. கேப்டன் சுனில் செத்ரி 2 கோல் அடித்து மிரட்டினார்.

ஆசிய கோப்பை தொடருக்கு(ஜன. 5– பிப். 1, 2019)தயாராகும் வகையில் இந்திய அணி சொந்தமண்ணில் 4 அணிகள்பங்கேற்கும் ‘இன்டர்கான்டினென்டல்’ (கண்டங்களுக்கு இடையிலான) கோப்பை கால்பந்துதொடரில் விளையாடியது. புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடம் பிடித்த இந்தியா (தரவரிசையில் 97வது இடம்), கென்யா (112) அணிகள் மும்பையில் நடந்த பைனலில் மோதின.

கச்சிதமான வியூகம்: போட்டியின் 8வது நிமிடத்தில் இந்திய கேப்டன் செத்ரியை எதிரணி வீரர் ‘பவுல்’ செய்ய, இந்திய அணிக்கு ‘பிரீ கிக்’ வாய்ப்பு கிடைத்தது. நமது அணியினர் கச்சிதமாக வியூகம் அமைத்தனர். வாய்ப்பை பயன்படுத்திய அனிருத், கோல் வலைக்குள் பந்தை உதைக்காமல், இடது பக்கம் இருந்த செத்ரிக்கு ‘பாஸ்’ செய்தார். கண்ணிமைக்கும் நேரத்தில், இதை இவர் கோலாக்கி, அணிக்கு முன்னிலை பெற்றுத்தந்தார்.

மிரட்டிய செத்ரி: உடல் அளவில் பலமான கென்ய அணியினர் சற்றும் விட்டுத்தராமல் போராடினர். ஆனால், செத்ரியின் ‘ராக்கெட்’ வேகத்தை இவர்களால் தடுக்க முடியவில்லை. இரண்டாவது கோல் வாய்ப்புக்காக காத்திருந்த இவருக்கு 29வது நிமிடத்தில் அனாஸ் பந்தை ‘பாஸ்’ செய்தார். இதை பெற்ற செத்ரி, எதிரணி வீரர்களை ஏமாற்றி, இடது காலால் பந்தை வலைக்குள் தள்ள இந்திய ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.

முடிவில், இந்தியா 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்று பட்டத்தை தனதாக்கியது.

மெஸ்சி சாதனை சமன்

இப்போட்டியில் இந்திய கேப்டன் சுனில் செத்ரி, 2 கோல் அடித்தார். இதன்மூலம், தற்போது விளையாடிக்கொண்டிருக்கும் வீரர்களில், அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் அர்ஜென்டினாவின் மெஸ்சியுடன் (124 போட்டி, 64 கோல்) 2வது இடத்தை பகிர்ந்து கொண்டார். இதுவரை, செத்ரி 102 போட்டியில் 64 கோல் அடித்துள்ளார். முதலிடத்தில் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (150 போட்டி, 81 கோல்) உள்ளார்.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
JC KARTHICK 2 weeks ago | Report abuse
இந்திய கால்பந்து அணிக்கு என் வாழ்த்துக்கள் . குறிப்பாக அணியின் கேப்டன் திரு சுனில் சேத்ரி அவர்களின் ஆட்டம் அருமை


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
G Karuppasamy Gurusamy 2 weeks ago | Report abuse
வாழ்த்துக்கள் இந்தியன் கால்பந்து அணிக்கும் அணித்தலைவர் ஷெத்ரிக்கும்.


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
JC KARTHICK 2 weeks ago | Report abuse
வாழ்த்துக்கள் இந்திய கால்பந்து அணி. குறிப்பாக கேப்டன் திரு சுனில் சேத்ரி


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
Daniel 2 weeks ago | Report abuse
இந்திய கால்பந்து அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.....




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?