Advertisement


கோல்கட்டாவில் ‘அர்ஜென்டினா டீ கடைக்காரர்’

ஜூன் 10, 2018.
 Comments  
 


Argentina and Messi Fan, Shib Shankar Patra, Kolkata, Tea Stall Owner
 

கோல்கட்டா: கோல்கட்டாவில், டீ கடை நடத்தி வருகிறார் ஷிப் ஷங்கர் பத்ரா, 53. கால்பந்து பிரியரான இவர், அர்ஜென்டினா அணி மற்றும் அந்த அணியின் நட்சத்திர வீரர் மெஸ்சியின் தீவிர ரசிகர். இவரது மனைவி சுவப்னா, மகள் நேகா, 20 மற்றும் மகன் சுபம், 10 என அனைவருமே மெஸ்சியின் ரசிகர்கள். கடந்த 2012 முதல், மெஸ்சியின் பிறந்த நாளன்று ‘கேக்’ வெட்டி கொண்டாடுவது மட்டுமல்லாமல், ரத்ததான முகாம் நடத்துவாராம். 


இந்த ஆண்டு ரஷ்யாவில் நடக்கவுள்ள உலக கோப்பை போட்டியை காண பத்ரா முடிவு செய்தார். இதற்காக ரூ. 60 ஆயிரம் வரை சேமித்து வைத்திருந்தார். ஆனால் ரஷ்யா சென்று போட்டியை காண ரூ. 1.5 லட்சம் வரை தேவைப்படும் என, ‘டூரிஸ்ட் ஏஜென்ட்’ தெரிவித்துவிட்டதால் முடிவை கைவிட்டார். இப்பணத்தை கொண்டு மூன்று மாடி கொண்ட தனது வீடு மற்றும் டீ கடையை அர்ஜென்டினாவின் தேசிய கொடி வண்ணத்தில் ‘பெயின்ட்’ செய்தார். வீட்டில் உள்ள பூஜை அறையிலும் இதே வண்ணத்தில் ‘பெயின்ட்’ செய்துள்ளார். தவிர, மெஸ்சியின் போஸ்டர்களை வீட்டின் பல்வேறு பகுதிகளில் வைத்துள்ளார். இவருக்கு, ‘அர்ஜென்டினா டீ கடைக்காரர்’ என்ற பெயரும் உண்டு.

இதுகுறித்து பத்ரா கூறியது: நான் புகை மற்றும் மது பழக்கத்திற்கு அடிமையானவன் அல்ல. அர்ஜென்டினா கால்பந்து மற்றும் மெஸ்சிக்கு மட்டுமே அடிமையானவன். சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பங்கை, கால்பந்திற்காக சேமித்து வைக்கிறேன். எனது குழந்தைகளும் மெஸ்சியின் தீவிர ரசிகர்கள். மெஸ்சியின் உணவு பழக்கம், பயன்படுத்தும் கார் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் நன்கு அறிந்து வைத்துள்ளனர். மெஸ்சியின் போட்டி என்றால் தவறாமல் பார்ப்பர். தேர்வு நடக்கும் காலத்தில், நள்ளிரவு போட்டி நடக்கும் பட்சத்தில், விரைவாக துாங்கி, பின் போட்டியை காண்பர். சால்ட் லேக் மைதானத்தில் அர்ஜென்டினா அணி பங்கேற்ற நட்பு போட்டியை நேரில் சென்று பார்த்ததை என்றும் மறக்க முடியாது. அர்ஜென்டினா விளையாடும் ஒவ்வொரு போட்டிக்கு முன், மெஸ்சியின் போஸ்டருக்கு குங்குமம் வைப்பேன். இம்முறை அர்ஜென்டினா உலக கோப்பை வெல்லும் என நம்புகிறேன்.

இவ்வாறு பத்ரா கூறினார்.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?