Advertisement


துடிப்பான ரொனால்டினோ

ஜூன் 10, 2018.
 Comments  
 


Ronaldinho, Brazil, Football, FIFA World Cup Soccer
 

பிரேசில் அணியின் முன்னாள் வீரர் ரொனால்டினோ, 38. கடந்த 2002ல், தென் கொரியா, ஜப்பானில் நடந்த உலக கோப்பை தொடரில் முதன் முறையாக பங்கேற்றார். இதில் துடிப்பாக செயல்பட்ட இவர், இங்கிலாந்துக்கு எதிரான காலிறுதியில் 35 மீட்டர் துாரத்தில் இருந்து ‘பிரீ–கிக்’ மூலம் கோல் அடித்தார். இது என்றும் மறக்க முடியாதது. இத்தொடரில் ரொனால்டோ, ரிவால்டோ, ரொனால்டினோ அடங்கிய ‘ஆர்’ கூட்டணி மிரட்ட, பிரேசில் அணி 5வது முறையாக கோப்பை வென்றது. கடந்த 2004, 2005ல் ‘பிபா’ சிறந்த வீரருக்கான விருதை வென்றார்.

பின் 2006ல் ஜெர்மனியில் நடந்த உலக கோப்பை தொடரில் பங்கேற்ற ரொனால்டினோ பெரிய அளவில் சாதிக்கவில்லை. கடந்த 2010ல் தென் ஆப்ரிக்காவில் நடந்த உலக கோப்பை தொடரில் இவர் ‘ரிசர்வ்’ வீரர்கள் பட்டியலில் இருந்த போதிலும், ஒரு போட்டியில் கூட விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சிறந்த வீரரான இவரை, 2014ல் சொந்த மண்ணில் நடந்த உலக கோப்பை தொடருக்கும் தேர்வு செய்யவில்லை. பிரேசில் அணி சார்பில் 97 போட்டியில் விளையாடிய இவர், 33 கோல்கள் அடித்துள்ளார். பார்சிலோனா (2003–2008), மிலன் (2008–2011) உள்ளிட்ட கிளப் அணிகளுக்காகவும் விளையாடி உள்ளார். கடந்த ஜனவரி மாதம் முறைப்படி ஓய்வை அறிவித்தார்.

‘பிரீ கிக்’

உலக கோப்பை கால்பந்து அரங்கில் ‘நம்பர்’ 10க்கு மவுசு அதிகம். பிரேசிலின் பீலே, அர்ஜென்டினாவின் மாரடோனா, பிரான்சின் ஜிடேன், பிளாட்டினி,  இங்கிலாந்தின் ரூனே, பிரேசிலின் ரொனால்டினோ, அர்ஜென்டினாவின் மெஸ்சி உள்ளிட்ட பல நட்சத்திர வீரர்கள் 10ம் ‘நம்பர்’ அச்சிடப்பட்ட ‘ஜெர்சி’ அணிந்து தான் விளையாடினர்.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?