Advertisement


தடகளம்: அனு குமார் தங்கம்

ஜூன் 10, 2018.
 Comments  
 


Junior Asian Youth Athletic Championships, Anu Kumar, Gold
 

கிபு: ஜூனியர் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 800 மீ., ஓட்டத்தில் இந்திய வீரர் அனு குமார் தங்கம் வென்றார். வட்டு எறிதலில் இந்திய வீராங்கனை அர்பன்தீப் கவுர் பஜ்வா, வெண்கலம் கைப்பற்றினார்.

ஜப்பானில், ஜூனியர் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் ஆண்களுக்கான 800 மீ., ஓட்டத்தில் பந்தய துாரத்தை ஒரு நிமிடம், 54.11 வினாடிகளில் கடந்த இந்தியாவின் அனு குமார், முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

ஆண்களுக்கான 5000 மீ., ஓட்டத்தில் பந்தய துாரத்தை 14 நிமிடம், 15.24 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்த இந்தியாவின் அஜீத் குமார், தங்கம் வென்றார். இதேபோல ‘டிரிபிள் ஜம்ப்’ போட்டியில் இந்திய வீரர் கமல்ராஜ் கனகராஜ், தங்கம் வென்றார்.

ஆண்களுக்கான 4*100 மீ., தொடர் ஓட்டத்தில் குர்விந்தர் சிங், பிரஜ்வால், ஆகாஷ் குமார், நிதின் பாலாகுமார் ஆகியோர் அடங்கிய இந்திய அணி, பந்தய துாரத்தை 40.75 வினாடிகளில் கடந்து 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றது.

பெண்களுக்கான வட்டு எறிதலில் இந்தியாவின் அர்பன்தீப் கவுர் பஜ்வா, 46.57 மீ., துாரம் எறிந்து 3வது இடம் பிடித்தார். இதன்மூலம் வெண்கலம் கைப்பற்றினார்.

இத்தொடரில், 5 தங்கம், 2 வெள்ளி, 10 வெண்கலம் என, 17 பதக்கங்கள் பெற்ற இந்தியா, 3வது இடம் பிடித்தது. முதலிரண்டு இடங்களை முறையே ஜப்பான் (14 தங்கம், 15 வெள்ளி, 12 வெண்கலம்), சீனா (11 தங்கம், 8 வெள்ளி, 5 வெண்கலம்) கைப்பற்றின.

Advertisement

இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா , நான்காவது ஒரு நாள் ஆட்டம்
இங்கிலாந்தில் ஆஸ்திரேலியா, 5 ஓடிஐ தொடர்கள், 2018
6/21/2018 , 18:30
ரிவர்ஸைட் க்ரெளண்ட், செஸ்ட்டர்-லி-ஸ்ட்ரீட்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?