Advertisement


இந்திய பெண்கள் அணி ஏமாற்றம்: ஆசிய கோப்பை பைனலில் தோல்வி

ஜூன் 10, 2018.
 Comments [1]  
 


Womens Asia Cup T20 Cricket, India, Bangladesh, Final
 

கோலாலம்பூர்: ஆசிய கோப்பை பைனலில் ஏமாற்றிய இந்திய பெண்கள் அணி, 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து. ‘பேட்டிங்’, ‘பவுலிங்கில்’ அசத்திய வங்கதேச அணி முதன்முறையாக கோப்பை வென்று சாதித்தது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், பெண்களுக்கான ஆசிய கோப்பை ‘டுவென்டி–20’ தொடர் நடந்தது. இதன் பைனலில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற வங்கதேச அணி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

ஹர்மன்பிரீத் ஆறுதல்: முதலில் ‘பேட்’ செய்த இந்திய அணிக்கு மந்தனா (7), தீப்தி சர்மா (4), மிதாலி ராஜ் (11) ஏமாற்றினர். அடுத்து வந்த அனுஜா பாட்டீல் (3), வேதா (11) நிலைக்கவில்லை. ருமானா அகமது பந்தில் தானியா பாட்டீல் (3), ஷிகா பாண்டே (1) அவுட்டாகினர். ஜுலான் கோஸ்வாமி (10), ‘ரன்–அவுட்’ ஆனார். பொறுப்பாக ஆடிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (56) அரைசதம் கடந்து நம்பிக்கை தந்தார்.

இந்திய அணி, 20 ஓவரில், 9 விக்கெட்டுக்கு, 112 ரன்கள் எடுத்தது. எக்தா பிஷ்ட் (1) அவுட்டாகாமல் இருந்தார்.

பூணம் அசத்தல்: சுலப இலக்கை விரட்டிய வங்கதேச அணிக்கு ஷமிமா சுல்தானா, அயாஷா ரஹ்மான் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 35 ரன் சேர்த்திருந்த போது, பூணம் யாதவ் வீசிய 7வது ஓவரின் கடைசி 2 பந்தில் அயாஷா (17), ஷமிமா (16) அவுட்டாகினர். பர்கானா (11) நிலைக்கவில்லை.  நிகார் சுல்தானா (27), பூணம் யாதவ் பந்தில் சரணடைந்தார்.

‘திரில்’ வெற்றி: கடைசி ஓவரில் வங்கதேச வெற்றிக்கு 9 ரன் தேவைப்பட்டன. ஹர்மன்பிரீத் வீசிய இந்த ஓவரின் 2வது பந்தில் ருமானா அகமது பவுண்டரி அடித்தார். நான்காவது பந்தில் சஞ்சிதா இஸ்லாம் (5) அவுட்டானார். ஐந்தாவது பந்தில் ருமானா (23) ‘ரன்–அவுட்டாக‘, கடைசி பந்தில் 2 ரன் தேவைப்பட்டது. இதில் ஜகானரா ஆலம், 2 ரன் எடுத்து வெற்றியை உறுதி செய்தார்.

வங்கதேச அணி, 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு, 113 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் பூணம் யாதவ், 4 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் வங்கதேச அணி, முதன்முறையாக ஆசிய கோப்பை வென்றது.  6 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா, 2வது இடம் பிடித்தது.

மீண்டும் தோல்வி

இம்முறை லீக் சுற்றில் மலேசியா, தாய்லாந்து, இலங்கை, பாகிஸ்தான் அணிகளை தோற்கடித்த இந்தியா, வங்கதேசத்திடம் வீழ்ந்தது. இதன்மூலம் ஆசிய கோப்பை வரலாற்றில் முதல் தோல்வியை பெற்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பைனலில் சொதப்பிய இந்திய அணி, மீண்டும் வங்கதேசத்திடம் தோல்வியடைந்தது.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
Sundaram 2 weeks ago | Report abuse
பெண்கள் போட்டியிலும் மேட்ச் பிக்சிங் வந்து விட்டதா. பலே




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?