Advertisement


தாடியை காப்பீடு செய்தாரா கோஹ்லி

ஜூன் 09, 2018.
 Comments  
 


Virat Kohli, Beard Insured, KL Rahul, India, Cricket
 

புதுடில்லி: இந்திய அணி கேப்டன் கோஹ்லியின் தாடி காப்பீடு செய்யப்பட்டுள்ளதாக சமூகவலைதளத்தில் ‘வீடியோ’ வெளியாகி கலகலப்பை ஏற்படுத்தியது.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோஹ்லி, 29. கடந்த ஆண்டு ‘பாலிவுட்’ நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்தார். மனைவிக்கு பிடிக்கும் என்பதால், கோஹ்லி தாடியுடன் வலம் வருகிறார். இந்நிலையில், ஒரு அறையில் இவரது தாடியை சிலர் அளவு எடுப்பது போன்றும், பின் கைகெயழுத்து பெறுவது போன்றும் சமூகவலைதளத்தில் ‘வீடியோ’ வெளியானது.

ராகுல் சந்தேகம்: இதை, இந்திய கிரிக்கெட் வீரர் லோகேஷ் ராகுல் தனது ‘டுவிட்டரில்’ பகிர்ந்திருந்தார். இத்துடன்,‘ இந்த ‘வீடியோவின்’ அடிப்படையில், கோஹ்லியின் தாடி காப்பீடு செய்யப்பட்டுள்ளதாக நினைக்கிறேன்,’ என, தெரிவித்திருந்தார். இதனால், சமூகவலைதளத்தில் இந்த விஷயம் அதிகமாக பேசப்பட்டது.

கோஹ்லி முற்றுப்புள்ளி: சில மணி நேரத்திற்குப்பின், இதற்கு கோஹ்லியே முற்றுப்புள்ளி வைத்தார். இவர் ‘டுவிட்டரில்’ வெளியிட்ட செய்தியில்,‘ எனது தாடி குறித்து விவாதம் கலகலப்பை ஏற்படுத்துகிறது. இதில் எவ்வித உண்மையும் இல்லை. ஒரு ஜாலிக்காக ஏற்படுத்தப்பட்ட விஷயம்,’ என, தெரிவித்துள்ளார்.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?