Advertisement


வறுமையை வென்ற வீரன்

ஜூன் 09, 2018.
 Comments  
 


Rivaldo, Brazil, Football, FIFA World Cup Soccer
 

பிரேசில் அணியின் நம்பிக்கை நாயகனாக விளங்கினார் ரிவால்டோ, 46. இளம் பருவத்தில் வறுமையில் வாடினார். சத்துணவு பற்றாக் குறையால் இவரது கால்கள் பாதிக்கப்பட்டன. பற்களும் உதிர்ந்தன. ஆனாலும், மனம் தளராமல் முயற்சி செய்த இவர், 16வது வயதில் தொழில் ரீதியான கால்பந்து வீரராக உருவெடுத்தார். சிறந்த மத்திய கள வீரரான இவருக்கு, 1993ல் பிரேசில் அணியில் வாய்ப்பு கிடைத்தது.

கடந்த 1996ல் ஒலிம்பிக், 1998ல் உலக கோப்பை போட்டிகளில் விளையாடினார். கடந்த 1999ல் ‘பிபா’ சிறந்த வீரர் விருதை தட்டிச் சென்றார். கடந்த 2002ல் நடந்த உலக கோப்பை தொடரில் விளையாடிய இவர், மொத்தம் 5 கோல் அடித்தார். இத்தொடரில் பிரேசில் அணி கோப்பை வென்ற போதிலும், இவரது ‘பார்ம்’ குறித்து சர்ச்சைகள் எழுந்தன. இவர், பார்சிலோனா (1997–2002), மிலன் (2002–2004), சாவ் பாலோ (2010–2011), மோகி மிரிம் (2014–2015) உள்ளிட்ட கிளப் அணிகளுக்காக விளையாடி உள்ளார்.

கடந்த 2004ல் ஜாம்பவான் பீலே வெளியிட்ட சிறந்த வாழும் 100 கால்பந்து வீரர்களுக்கான பட்டியலில் இடம் பிடித்தார். பத்து ஆண்டுகளாக (1993–2003) பிரேசில் அணிக்காக விளையாடிய இவர், 74 போட்டிகளில் 35 கோல்கள் அடித்தார். அதிக கோலடித்த பிரேசில் வீரர்கள் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளார். கடந்த 2014ல் ஓய்வை அறிவித்தார். கடந்த 2015ல் ஈரான் சினிமா (‘ஐ ஆம் நாட் சால்வடார்’) ஒன்றில் நடித்திருந்தார்.

‘பிரீ கிக்’

ஸ்பெயின் அணிக்காக அதிக போட்டிகளில் பங்கேற்றவர் கோல்கீப்பர் இகர் கேசில்லாஸ். தற்போது இவர், இதுவரை 167 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

* இதேபோல, 98 போட்டிகளில், 59 கோல்கள் அடித்தவர் ஸ்பெயினின் டேவிட் வில்லா. இந்த அணிக்காக அதிக கோல் அடித்தவர் இவர் தான்.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?