Advertisement


ஸ்குவாஷ்: சுனய்னா வாய்ப்பு

ஜூன் 09, 2018.
 Comments  
 


Asian Games, Squash, Sunayna Kuruvilla, Tanvi Khanna, Ramit Tandon
 

சென்னை: ஆசிய விளையாட்டிற்கான இந்திய ஸ்குவாஷ் அணியில் சுனய்னா, தன்வி உள்ளிட்ட இளம் நட்சத்திரங்கள் வாய்ப்பு பெற்றுள்ளனர்.

இந்தோனேசியாவில் வரும் ஆகஸ்ட் 18ல் ஆசிய விளையாட்டு துவங்குகிறது. இதில் இடம் பெற்றுள்ள ஸ்குவாஷ் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் பிரிவில் ‘சீனியர்’ நட்சத்திரங்களான தமிழகத்தின் தீபிகா பல்லீகல், ஜோஷ்னா சின்னப்பா இடம் பிடித்துள்ளனர். சமீபத்திய, காமன்வெல்த் விளையாட்டில் (கோல்டு கோஸ்ட், ஆஸி.,) இருவரும் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றதால், இம்முறையும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இது தவிர, சென்னையை சேர்ந்த சுனய்னா குருவில்லா மற்றும் டில்லியின் தன்வி கன்னா என்ற இரண்டு இளம் வீராங்கனைகளுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இவர்கள், தேசிய சாம்பியன்ஷிப்பில் சிறப்பாக செயல்பட்டதால் தேர்வாகினர்.

ஆண்கள் பிரிவை பொறுத்தவரை, சவுரவ் கோசால், ஹரிந்தர் பால் சிங், மன்யோன்கர் இடம் பிடித்துள்ளனர். இளம் வீரரான மேற்குவங்கத்தை சேர்ந்த ரமித் டான்டனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த ஆசிய விளையாட்டில் (இன்ச்சான், 2014), அணிகளுக்கான ஆண்கள் பிரிவில் தங்கமும், பெண்கள் பிரிவில் வெள்ளியும் கிடைத்திருந்தது.

Advertisement

இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா , நான்காவது ஒரு நாள் ஆட்டம்
இங்கிலாந்தில் ஆஸ்திரேலியா, 5 ஓடிஐ தொடர்கள், 2018
6/21/2018 , 18:30
ரிவர்ஸைட் க்ரெளண்ட், செஸ்ட்டர்-லி-ஸ்ட்ரீட்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?