Advertisement


டேபிள் டென்னிஸ்: அர்ச்சனா தகுதி

ஜூன் 09, 2018.
 Comments  
 


Archana Girish Kamath, Table Tennis, Youth Olympics, Argentina
 

ரரோடோங்கா: யூத் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டிக்கு இந்திய வீராங்கனை அர்ச்சனா கிரிஷ் கமத் தகுதி பெற்றார்.

அர்ஜென்டினாவில், யூத் ஒலிம்பிக் போட்டி வரும் அக். 6–18ல் நடக்கவுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள டேபிள் டென்னிஸ், ‘ஓசியானியா’ பிரிவு தகுதிச் சுற்று குக் தீவு பகுதியில் அமைந்துள்ள ரரோடோங்காவில் நடந்தது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ‘பை’ வழங்கப்பட்ட இந்தியாவின் அர்ச்சனா கிரிஷ் கமத், காலிறுதியில் 4–2 (11–13, 8–11, 11–9, 13–11, 11–7, 11–3 என, பிலிப்பைன்சின் ஜன்னா மரியம் ரோமிரானை வீழ்த்தினார். அரையிறுதியில் அர்ச்சனா, 4–0 (11–2, 11–7, 11–7, 11–5) என, ஈரானின் மஷித் ஆஷ்தாரியை தோற்கடித்தார். அடுத்து நடந்த பைனலில் அசத்திய அர்ச்சனா, 4–1 (11–5, 9–11, 11–8, 11–9, 11–8) என, மலேசியாவின் சங் லி சியனை வீழ்த்தினார். இதன்மூலம் யூத் ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்றார்.

ஏற்கனவே யூத் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டிக்கு இந்திய வீரர் மனவ் தக்கர் தகுதி பெற்றுள்ளார்.

Advertisement

இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா , நான்காவது ஒரு நாள் ஆட்டம்
இங்கிலாந்தில் ஆஸ்திரேலியா, 5 ஓடிஐ தொடர்கள், 2018
6/21/2018 , 18:30
ரிவர்ஸைட் க்ரெளண்ட், செஸ்ட்டர்-லி-ஸ்ட்ரீட்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?