Advertisement


நியூசி., பெண்கள் உலக சாதனை

ஜூன் 08, 2018.
 Comments  
 


Suzie Bates, New Zealand, One Day International Cricket, Highest Total, World Record, Ireland
 

டப்ளின்: ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து பெண்கள் அணி 490 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தது. கேப்டன் சுசி சதம் அடிக்க அயர்லாந்து அணியை 346 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 

அயர்லாந்து சென்றுள்ள நியூசிலாந்து பெண்கள் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி டப்ளினில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி ‘பேட்டிங்’ தேர்வு செய்தது.

சுசி அசத்தல் சதம்: நியூசிலாந்து அணிக்கு கேப்டன் சுசி பேட்ஸ், வாட்கின் ஜோடி சிறப்பான துவக்கம் தந்தது. வாட்கின் (62) அரை சதம் கடந்தார். பின், இணைந்த சுசி, கிரீன் ‘சூப்பராக’ விளையாடினர். இருவரும் சதம் விளாசினர். சுசி 151 ரன்களில் ஆட்டமிழந்தார். மாரிட்ஸ் பந்தில் கிரீன் (121) சிக்கினார். முடிவில், நியூசிலாந்து அணி 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 490 ரன்கள் எடுத்தது. கெர்ரி (81), பெர்னாடின் (23) அவுட்டாகாமல் இருந்தனர்.

இமாலய இலக்கை விரட்டிய அயர்லாந்து அணிக்கு வால்ட்ரன், ஹேயோ தலா 4 ரன்களில் திரும்பினர். அதிகபட்சமாக கேப்டன் லாரா 37 ரன்கள் எடுத்தார். முடிவில், அயர்லாந்து அணி 35.3 ஓவரில் 144 ரன்களுக்கு ஆல்–அவுட்டாகி, வீழ்ந்தது. 

உலக சாதனை

அபாரமாக விளையாடிய நியூசிலாந்து அணி, ஒரு நாள் அரங்கில் அதிக ரன் (490/4 ரன்) எடுத்து உலக சாதனை படைத்தது. இதற்கு முன், இங்கிலாந்து ஆண்கள் அணி பாகிஸ்தானுக்கு எதிராக 444/3 ரன்கள் (நாட்டிங்காம், 2016) எடுத்ததே அதிகமாக இருந்தது. பெண்கள் கிரிக்கெட்டை பொறுத்தவரை, நியூசிலாந்து அணி தனது முந்தைய (455/5 ரன், எதிர்– பாக்., கிறைஸ்ட்சர்ச்) சாதனையை முறியடித்தது.

119 ரன்

அயர்லாந்து பவுலரான காரா முர்ரே, 10 ஓவரில் 119 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதன் மூலம், பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக ரன் விட்டுத்தந்த வீராங்கனையானார். 

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?