Advertisement


எங்களுக்கும் பங்கு கொடுங்க: வீரர்களுக்கு ஹரியானா அரசு உத்தரவு

ஜூன் 08, 2018.
 Comments  
 


Haryana Government, Sportspersons Employed Earnings, Commercial and Professional Commitments
 

சண்டிகர்: ‘விளையாட்டு நட்சத்திரங்கள் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை தங்களுக்கு தர வேண்டும்,’ என்ற ஹரியானா அரசின் உத்தரவு கடும் எதிர்ப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. 

ஹரியானா மாநில அரசு சார்பில் திடீரென ஒரு உத்தரவு போடப்பட்டது. இதில் மாநில அரசுப்பணியில் இருக்கும் விளையாட்டு நட்சத்திரங்கள் தொழில்முறை, வணிக ஒப்பந்தத்தில் கிடைக்கும் வருமானத்தில் 3ல் ஒரு பங்கை அரசுக்கு செலுத்த வேண்டும். இந்த பணம் மாநில விளையாட்டு கவுன்சிலில் முதலீடு செய்யப்பட்டு விளையாட்டு துறை வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும்,’ என கூறப்பட்டது. 

இதனால் ஹரியானாவை சேர்ந்த இந்திய மல்யுத்த நட்சத்திரங்கள் சுஷில் குமார், யோகேஷ்வர் தத், கீதா போகத், பபிதா குமாரி உள்ளிட்டோருக்கு சிக்கல் ஏற்பட்டது. 

பபிதா எதிர்ப்பு: பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காமன்வெல்த்தில் வெள்ளி வென்று ஹரியானா போலீசில் பணியாற்றும் பபிதா கூறுகையில்,‘‘ மாநில அரசின் இந்த உத்தரவு வீரர், வீராங்கனைகளின் பயிற்சிக்கு தடை ஏற்படுத்தும். எங்களது வருமானத்திற்கு ஏற்கனவே வரி கட்டுகிறோம். பின் எதற்காக அரசு இப்படி கூறுகிறது. ஒவ்வொரு நட்சத்திரமும் நாட்டிற்காக பதக்கம் வெல்ல செய்யும் தியாகத்தை அரசு உணருமா,’’ என்றார்.

முட்டாள்தனமானது: அரசுப்பணியில் இல்லாத சுஷில் (ரயில்வே துறை) கூறுகையில்,‘‘ அரசு அறிவிப்பு விளையாட்டு நட்சத்திரங்களுக்கு ஊக்கம் தருமாறு இருக்க வேண்டும். ஆனால், இந்த உத்தரவு உலகில் எங்கும் கிடையாது. இதுபோன்ற நெருக்கடியில் எப்படி போட்டியில் சாதிக்க முடியும்,’ என்றார்.

யோகேஷ்வர் (ரயில்வே துறை) ‘டுவிட்டரில்’ வெளியிட்ட செய்தியில்,‘ முட்டாள்தனமான முடிவை எடுத்த அதிகாரிகளை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். மாநில விளையாட்டுத்துறை வளர்ச்சியை இது குறைத்து விடும்,’ என தெரிவித்துள்ளார்.

திடீர் பல்டி: மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தியில்,‘ நமது வீரர், வீராங்கனைகளின் பங்களிப்பை எண்ணி பெருமை கொள்கிறோம். இவர்களை பாதிக்கும் திட்டம் குறித்து நிச்சயம் பரிசீலிப்போம். விளையாட்டுத்துறையால் வெளியிடப்பட்ட உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது,’ என, தெரிவித்துள்ளார்.

யாருக்கு பாதிப்பு

ஹரியானா அரசின் புதிய உத்தரவால், டி.எஸ்.பி.,யாக உள்ள தொழில்முறை குத்துச்சண்டை வீரர்களான விஜேந்தர் சிங், அகில் குமாருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களுடன், காவல் துறையில் பணியாற்றும் இந்திய கேப்டன் சர்தார் சிங் (ஹாக்கி), கீதா, பபிதா குமாரியும் இந்த திட்டத்திற்கு உட்படுவர். 

என்ன சொல்கிறது அரசு

ஹரியானா மாநில அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் அனில் விஜ் கூறுகையில்,‘‘ மாநில அரசில் பணிபுரியும் ஊழியர்கள் தொழில்முறை அல்லது வணிக ஒப்பந்தம் மூலம் பெறப்படும் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை முதலீடு செய்ய வேண்டும் என விதி 56ல் ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விதி புதிதாக போடப்படவில்லை. தற்போதும் கூட, தேசத்திற்காக விளையாடும் போட்டிகளில் பெறும் வருமானத்தை தர வேண்டிய அவசியம் இல்லை,’’ என்றார். 

அடுத்தடுத்து சர்ச்சை

சமீபத்தில், காமன்வெல்த் விளையாட்டில் பதக்கம் வென்ற ஹரியானா மாநில அரசில் பணிபுரியும், விளையாட்டு நட்சத்திரங்களுக்கு தரப்படும் பரிசுத்தொகை குறைக்கப்பட்டது. இதனால், இதற்கான விழாவை வீரர், வீராங்கனைகள் புறக்கணித்தனர். தற்போது, ‘வருமானத்தில் பங்கு’ என்ற புதிய உத்தரவால் மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளது.

Advertisement

இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா , நான்காவது ஒரு நாள் ஆட்டம்
இங்கிலாந்தில் ஆஸ்திரேலியா, 5 ஓடிஐ தொடர்கள், 2018
6/21/2018 , 18:30
ரிவர்ஸைட் க்ரெளண்ட், செஸ்ட்டர்-லி-ஸ்ட்ரீட்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?