Advertisement


தமிழில் உலக கால்பந்து வர்ணனை

ஜூன் 08, 2018.
 Comments  
 


FIFA World Cup Soccer, Tamil Commentary
 

சென்னை: ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடருக்கான போட்டிகள் தமிழில் வர்ணனை செய்யப்பட உள்ளது.

ரஷ்யாவில், 21வது ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் வரும் 14 முதல் ஜூலை 15 வரை நடக்கவுள்ளது. இதில் ரஷ்யா, ‘நடப்பு சாம்பியன்’ ஜெர்மனி, பிரேசில், அர்ஜென்டினா உள்ளிட்ட 32 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான போட்டிகளை இந்தியாவில் நேரடி ஒளிபரப்பு செய்யும் உரிமம், ‘சோனி பிட்சர்ஸ் நெட்ஒர்க்’ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

பொதுவாக போட்டிகள் ஆங்கிலம், ஹிந்தியில் வர்ணனை செய்யப்படும். தமிழகம், கேரளா, ஆந்திரா, மேற்கு வங்கத்தில் உள்ள கால்பந்து ரசிகர்களுக்காக, தமிழ், மலையாளம், தெலுங்கு, பெங்கால் மொழிகளிலும் வர்ணனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள், இந்நாள் கால்பந்து நட்சத்திரங்களை கொண்டு போட்டி துவங்குவதற்கு முன், முதல் பாதி முடிவில் மற்றும் போட்டி முடிந்த பின் நடத்தப்படும் ‘புட்பால் எக்ஸ்டிரா’ என்ற நிகழ்ச்சி ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் இடம் பெறும். இதில் இந்திய அணி கேப்டன் சுனில் செத்ரி, முன்னாள் வீரர்களான பாய்ச்சங் பூட்டியா (இந்தியா), லுாயிஸ் கார்சியா (ஸ்பெயின்), லுாயிஸ் சகா (பிரான்ஸ்), டேவிட் ஜேம்ஸ் (இங்கிலாந்து) ஆகியோர் பங்கேற்பர்.

சோனி டென் 2ல் ஆங்கிலத்திலும், சோனி டென் 3ல் ஹிந்தியிலும், சோனி ஈ.எஸ்.பி.என்., சேனலில் தமிழ், மலையாளம், தெலுங்கு, பெங்கால் மொழிகளிலும் வர்ணனை செய்யப்படும்.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?