Advertisement


இதயம் கவர்ந்த பெக்காம்

ஜூன் 08, 2018.
 Comments  
 


David Beckham, England, Soccer, FIFA World Cup
 

உலக கோப்பை அரங்கில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரராக ஜொலித்தார் டேவிட் பெக்காம், 43. பந்துகளை நளினமாக ‘பாஸ்’ செய்வதில் கில்லாடியான இவர், ‘பிரீ–கிக்’ வாய்ப்பில் கோல் அடிப்பதில் கெட்டிக்காரர். அடிக்கடி ‘ஹேர் ஸ்டைலை’ மாற்றும் இவர், விளம்பர ‘மாடலாகவும்’ கொடிகட்டிப் பறந்தார்.

கடந்த 1975ல் லண்டனில் பிறந்தார் பெக்காம். மான்செஸ்டர் யுனைடெட் (1992–2003), ரியல் மாட்ரிட் (2003–2007), லாஸ் ஏஞ்சல்ஸ் காலக்ஸி (2007–2012), மிலன் (2009–2010), பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (2013) கிளப் அணிகளுக்காக விளையாடி உள்ளார். இங்கிலாந்து (பிரிமியர் லீக், எப்.ஏ., கோப்பை), ஸ்பெயின் (‘லா லிகா’), அமெரிக்கா (எம்.எல்.எஸ்.,), பிரான்ஸ் (லீக் 1) என, 4 நாடுகளில் நடக்கும் கிளப் அணிகளுக்கான தொடர்களில் கோப்பை வென்ற முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனை படைத்தார்.

கடந்த 1998ல் பிரான்சில் நடந்த உலக கோப்பை தொடரில் முதன் முறையாக பங்கேற்றார் பெக்காம். லீக் போட்டியில் அர்ஜென்டினாவின் சிமியோனை தற்செயலாக உதைக்க, நடுவரால் ‘ரெட் கார்டு’ காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்ட இவர், தனது திறமையான ஆட்டத்தால் இங்கிலாந்து அணியின் கேப்டனாக உயர்ந்தார். கடந்த 2002, 2006ல் நடந்த உலக கோப்பை தொடரில், இவரது அபார ஆட்டம் கைகொடுக்க, இங்கிலாந்து அணி காலிறுதி வரை முன்னேறியது. கடந்த 2010ல் கணுக்கால் காயம் காரணமாக உலக கோப்பை தொடரில் பங்கேற்கவில்லை.

கடந்த 2004ல் பீலே அறிவித்த சிறந்த 100 வாழும் கால்பந்து வீரர்களுக்கான பட்டியலில் இடம் பிடித்தார். சிறந்த மத்திய கள வீரரான பெக்காம், இங்கிலாந்து அணிக்காக 115 சர்வதேச போட்டிகளில் 17 கோல்கள் அடித்துள்ளார். ரசிகர்களின் இதயம் கவர்ந்த இவர், 2013ல் ஓய்வு பெற்றார்.

‘பிரீ கிக்’

உலக கோப்பை கால்பந்து வரலாற்றில், அதிக தொடர்களில் பங்கேற்ற வீரர்கள் பட்டியலில் மெக்சிகோ அணியின் ஆன்டோனியோ கார்பஜல் (1950, 54, 58, 62, 66), ஜெர்மனியின் லோதர் மத்தாயஸ் (1982, 86, 90, 94, 98) ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இவர்கள் இருவரும் தலா 5 சீசனில் பங்கேற்றுள்ளனர்.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?