Advertisement


கால்பந்து: இந்தியா ஏமாற்றம்

ஜூன் 07, 2018.
 Comments  
 


Intercontinental Cup Soccer, India, New Zealand
 

மும்பை: நான்கு நாடுகள் இடையிலான கால்பந்து தொடரில் இந்தியா அணி 1–2 என நியூசிலாந்திடம் வீழ்ந்தது.

ஆசிய கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி சொந்தமண்ணில் ‘இன்டர்கான்டினென்டல்’ கோப்பை (கண்டங்களுக்கு இடையிலான) கால்பந்து தொடரில் பங்கேற்கிறது. கென்யா, சீன தைபே, நியூசிலாந்து அணிகளும் இதில் விளையாடுகின்றன.

சீன தைபே (5–0), கென்யா (3–0) அணிகளை வீழ்த்திய இந்திய அணி (97வது இடம்) ஏற்கனவே பைனலுக்கு (ஜூன் 10) முன்னேறி விட்டது. நேற்று தனது மூன்றாவது மற்றும் கடைசி லீக் போட்டியில் 120 வது இடத்தில் உள்ள நியூசிலாந்தை சந்தித்தது. இந்திய வீரர் ஜீஜே களமிறங்கிய 50 வது சர்வதேச போட்டியான இதன் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

இரண்டாவது பாதி துவங்கிய சில நிமிடத்தில் (47வது) கேப்டன் சுனில் செத்ரி, ஒரு கோல் அடித்தார். அடுத்த 2வது நிமிடம் நியூசிலாந்தின் டி ஜாங் (49வது) தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்தார். 86வது நிமிடம் மாற்று வீரராக களமிறங்கிய டையர் ஒரு கோல் அடித்தார். முடிவில் இந்திய அணி 1–2 என்ற கோல் கணக்கில் தோற்றது.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?