Advertisement


ஷரபோவா அதிர்ச்சி தோல்வி: பிரெஞ்ச் ஓபனில் ஏமாற்றம்

ஜூன் 06, 2018.
 Comments  
 


Maria Sharapova, French Open Tennis, Halep, Muguruja
 

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ரஷ்யாவின் ஷரபோவா அதிர்ச்சி தோல்வியடைந்தார். பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு ஸ்பெயினின் முகுருஜா, ருமேனியாவின் ஹாலெப் முன்னேறினர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் உலகின் ‘நம்பர்–3’ வீராங்கனையான ஸ்பெயினின் கார்பைன் முகுருஜா, 30வது இடத்தில் உள்ள ரஷ்யாவின் மரியா’ ஷரபோவா மோதினர். ஒரு மணி நேரம், 10 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய ஷரபோவா 2–6, 1–6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து பரிதாபமாக வெளியேறினார். முகுருஜா அரையிறுதிக்கு முன்னேறினார்.

ஹாலெப் கலக்கல்: மற்றொரு காலிறுதியில் உலகின் ‘நம்பர்–1’ வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலெப், 12வது இடத்தில் உள்ள ஜெர்மனியின் கெர்பர் மோதினர். ‘டை பிரேக்கர்’ வரை நீடித்த முதல் செட்டை கெர்பர் 7–6 எனக் கைப்பற்றினார். பின் எழுச்சி கண்ட ஹாலெப், 2வது செட்டை 6–3 எனக் கைப்பற்றினார். தொடர்ந்து அசத்திய இவர், வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை 6–2 என வென்றார்.

இரண்டு மணி நேரம், 14 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில் ஹாலெப், 6–7, 6–3, 6–2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

அரையிறுதியில் முகுருஜா, ஹாலெப் மோதவுள்ளனர்.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?