Advertisement


‘சீனியர்’ கோல்கீப்பர்

ஜூன் 06, 2018.
 Comments  
 


essam el hadary
 

எகிப்தின் ஹாட்ரி, உலக கோப்பை கால்பந்து தொடரில் அதிக வயதில் பங்கேற்கும் வீரர் என்ற சாதனை படைக்க உள்ளார்

எகிப்து கால்பந்து அணி கோல்கீப்பர் எசாம் எல் ஹாட்ரி, 45. சர்வதேச அரங்கில் 1996ல் கால் பதித்தார். 6 அடி, 2 ‘இன்ச்’ உயரம் கொண்ட இவரின் எடை 86 கி.கி., என்பதால் எகிப்தில் உள்ள ‘அஸ்வான் ஹை’ அணையை குறிக்கும் வகையில், ‘ஹை அணை’ என செல்லமாக அழைப்பர். எகிப்து அணிக்காக 156 போட்டிகளில்  விளையாடிய போதும் தற்போதுதான் உலக கோப்பை அதிர்ஷ்டம் அடித்துள்ளது. 

28 ஆண்டுகளாக கோல் கீப்பீங் செய்து வந்த காரணத்தால் இவரது கைகளில் கணக்கிட முடியாத அளவுக்கு காயங்கள் ஏற்பட்டு, பார்ப்பதற்கு மனித கைகளைப் போன்றே இருக்காது. தற்போது, 1990க்குப் பின் எகிப்து அணி உலக கோப்பை தொடரில் விளையாட உள்ளது. இந்த அணி ‘ஏ’ பிரிவில் ரஷ்யா, உருகுவே, சவுதி அரேபியாவுடன் இடம் பெற்றுள்ளது. இதையடுத்து ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடரில் அதிக வயதில் பங்கேற்கும் வீரர் என்ற சாதனை படைக்க காத்திருக்கிறார் ஹாட்ரி. இதற்கு முன் கொலம்பியா கோல்கீப்பர் மான்ட்ராகன், 43வது வயதில் (2014, பிரேசில்) விளையாடியதே சாதனையாக இருந்தது.

தடை அதை உடை

ஹாட்ரி கூறியது: கனவுகளை எட்ட வேண்டும் என்ற நோக்கம் இருந்தால், நிச்சயமாக ஒரு நாள் சாதிக்கலாம். எத்தனையோ பட்டம் வென்றிருந்தாலும், உலக கோப்பையில் பங்கேற்க வேண்டும் என போராடிக் கொண்டே இருந்தேன். இதற்கு பலன் கிடைத்திருப்பது மகிழ்ச்சி. முடியாது என்ற வார்த்தைக்கு என் வாழ்வில் இடம் கிடையாது. வயது என்பது வெறும் எண்கள் மட்டும்தான். தற்போதும் கடுமையான பயிற்சியில் ஈடுபடுகிறேன். பல தடைகளை தாண்டித்தான் இந்த இலக்கை எட்டியுள்ளேன். இருப்பினும் கால்பந்தில் தற்போது வரை முதல் படியில் இருப்பதாகத் தான் எண்ணுகிறேன். மனைவி மற்றும் குழந்தைகளுடன் நேரம் செலவழிக்க முடியவில்லை. இருப்பினும், கால்பந்து மீதான ஆர்வம் குறையவே இல்லை,’’ என்றார்.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?