Advertisement


மீண்டும் வருவேன்

ஜூன் 06, 2018.
 Comments  
 


sania
 

‘‘டென்னிஸ் வாழ்க்கையை விட்டுத்தர மாட்டேன், மீண்டும் வருவேன்,’’ என சானியா மிர்சா தெரிவித்தார்.

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, 31. பெண்கள் இரட்டையர் (3), கலப்பு இரட்டையர் (3) என கிராண்ட்ஸ்லாம் அரங்கில் 6 கோப்பை வென்றவர். 2010 ல் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை திருமணம் செய்தார். விரைவில் அம்மா ஆக உள்ள அவர் அளித்த பேட்டி:

 மீண்டும் டென்னிஸ் களத்துக்கு வருவீர்களா?

அம்மா ஆக உள்ளதை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். அதேநேரம் எனது கனவுகளை, டென்னிஸ் வாழ்க்கையை விட்டுத் தர மாட்டேன். இனிமேல் டென்னிஸ் விளையாட மாட்டேன் என்று முடிவு செய்து விட வேண்டாம். மேரி கோம் மூன்று குழந்தைகளுக்கு அம்மா ஆன பின்பும் சாதித்து வருகிறார். செரினா வில்லியம்ஸ் மீண்டும் வந்துள்ளார். இதுபோல நானும் வருவேன்.

இந்தியாவில் இருந்து ஒற்றையர் பிரிவில் அதிக நட்சத்திரங்கள் வருவது இல்லையே ஏன்?

கடந்த 2003–2013 வரை நானும் ஒற்றையர் போட்டிகளில் பங்கேற்றேன். உடற்தகுதி குறைந்ததால் இரட்டையருக்கு திரும்பினேன். ஏனெனில் ஒற்றையர் போட்டிகள் மிக கடினமானது, சவாலானது. இதற்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். சிறு வயதில் இருந்தே பயிற்சிகளை துவங்க வேண்டும்.

உங்கள் வாழ்க்கை குறித்த சினிமாவுக்கு அனுமதிப்பீர்களா?

எனது 15 வயதில் ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்றேன். இதை எல்லோரும் மறந்து விட்டனர். எனது துவக்க காலத்தில் நடந்த பல சுவாரஸ்ய விஷயங்கள் ரசிகர்களுக்கு தெரியப்படுத்த வேண்டியுள்ளன. சினிமா எடுத்தால் மகிழ்ச்சி அடைவேன். இவ்வாறு சானியா கூறினார்.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?