Advertisement


கால்பந்து: ரியல் சால்ட் வெற்றி

ஜூன் 06, 2018.
 Comments  
 


soccer
 

அமெரிக்காவில் மேஜர் லீக் கால்பந்து தொடர் நடக்கிறது. சான்டி நகரில் நடந்த லீக் போட்டியில் ரியல் சால்ட் லேக், ஹூஸ்டான் டைனமோ அணிகள் மோதின. அபாரமாக விளையாடிய ரியல் சால்ட் அணி 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

சைக்கிள் பந்தயம்: கிறிஸ் கலக்கல்

இத்தாலியில் சர்வதேச சைக்கிள் பந்தயம் நடந்தது. மொத்தம் 3,572 கி.மீ., துாரம், 21 சுற்றுகளாக நடந்தது. இதில் துடிப்பாக விளையாடிய ‘டீம் ஸ்கை’ அணியின் பிரிட்டன் வீரர் கிறிஸ் புரோம் (மொத்தம் நேரம் 89 மணி, 02:39 நிமிடம்) முதலிடம் பிடித்து கோப்பை வென்றார்.

வாலிபால்: ஜப்பான் சாம்பியன்

பெண்கள் ஆசிய வாலிபால் சாம்பியன்ஷிப் (17 வயதுக்குட்பட்ட) தாய்லாந்தில் நடந்தது. கஜகஸ்தான், ஹாங்காங் உள்ளிட்ட அணிகள் பங்கேற்றன. பைனலில் ஜொலித்த ஜப்பான் அணியினர் 3–1 என்ற கணக்கில் சீனாவை வீழ்த்தி பட்டத்தை தட்டிச்சென்றனர். தென் கொரியாவை வென்ற தாய்லாந்து 3வது இடம் பிடித்தது.

கோல்ப்: இத்தாலி வீரர் ஆதிக்கம்

இங்கிலாந்தின் சர்ரே பகுதியில் சர்வதேச ஓபன் கோல்ப் நடந்தது. இதில் டென்மார்க்கின் லாசே, இங்கிலாந்தின் கிறிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மொத்தம் நடந்த நான்கு சுற்று முடிவில், ஆதிக்கம் செலுத்திய இத்தாலியின் பிரான்சிஸ்கோ 271 புள்ளி பெற்று சாம்பியன் பட்டத்தை வசமாக்கினார். 

ரக்பி: வேல்ஸ் ஏமாற்றம்

ஸ்காட்லாந்து, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த கிளப் அணிகளுக்கு இடையே ‘புரோ 14’ ரக்பி தொடர் நடந்தது. நடப்பு ‘சீசனுக்கான’ பைனலில் மிரட்டிய அயர்லாந்தின் லீன்செஸ்டர் அணி 40–32 என வேல்சின் ஸ்கேர்லெட்ஸ் அணியை வீழ்த்தி கோப்பையை தட்டிச்சென்றது.

படகு வலித்தல்: எஸ்தர் அபாரம்

பிரான்சின் கிராவ்லயன்ஸ் பகுதியில் ஐரோப்பிய ‘ஜூனியர்’ படகுவலித்தல் சாம்பியன்ஷிப் நடந்தது. இதன் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் அசத்திய ஸ்பெயின் வீராங்கனை எஸ்தர் பிரிட்ஸ், இலக்கை 7 நிமிடம் 41:64 வினாடியில் கடந்து தங்கம் வென்றார். வெள்ளி, வெண்கலம் முறையே இத்தாலியின் கிரீடா, சுவிட்சர்லாந்தின் ஜனா கைப்பற்றினர்.

ஸ்குவாஷ்: கிறிஸ்டியானே ‘சூப்பர்’

நியூசிலாந்தின் ஆக்லாந்தில் பெண்களுக்கான சர்வதேச ஓபன் ஸ்குவாஷ் நடந்தது. இதன் பைனலில் ஆஸ்திரேலியாவின் கிறிஸ்டியானே, நியூசிலாந்தின் காட்லினை எதிர் கொண்டார். துவக்கம் முதலே மிரட்டிய கிறிஸ்டியானே 11–9, 11–4, 11–7 என்ற கணக்கில் வென்று கோப்பையை தனதாக்கினார்.

டென்னிஸ்: ஹிரோகி அசத்தல்

பிரிட்டனின் லாப்பாரோ பகுதியில் ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவு பைனலில் ஜப்பானின் ஹிரோகி, சக வீரரான யோசுகியுடன் மோதினார். துடிப்பாக விளையாடிய ஹிரோகி 7–6, 6–2 என்ற நேர் செட் கணக்கில் வாகை சூடி பட்டத்தை வென்றார்.

 

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?