Advertisement


செய்னா, சிந்து பயிற்சியில் மாற்றம்

ஜூன் 05, 2018.
 Comments  
 


sindhu
 

புதுடில்லி: இந்திய பாட்மின்டன் வீராங்கனைகளான சிந்து, செய்னா  வெவ்வேறு இடங்களில் பயிற்சி பெறுகின்றனர்.

இந்தியாவின் நட்சத்திர பாட்மின்டன் வீராங்கனைகள் செய்னா, 28, சிந்து, 22. இருவரும் கோபிசந்த் அகாடமியில் பயிற்சி பெற்று வருகின்றனர். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ள இவர்களுக்கு இடையிலான போட்டியில் செய்னா தான் ஆதிக்கம் செலுத்துவார்.

சமீபத்திய காமன்வெல்த் விளையாட்டில் செய்னாவிடம் வீழ்ந்த சிந்து, இவருக்கு எதிராக ஹாட்ரிக் தோல்வியை பதிவு செய்தார். இதனால் இருவரது பலம், பலவீனத்தை ஒருவருக்கு ஒருவர் அறிய முடியாதபடி, வெவ்வேறு இடங்களில் பயிற்சி பெற துவங்கி உள்ளனர்.

சிந்து தந்தை ரமணா கூறியது: விளையாட்டில் ஒருவரது பலம், பலவீனம் என்பது வெளிப்படையாக தெரியக்கூடாது. இதனால் பயிற்சியாளர் கோபிசந்தின் பழைய அகாடமியில் சிந்துவும், புதிய அகாடமியில் செய்னாவும் தனித்தனியாக பயிற்சி பெறுகின்றனர்.

இருவருக்கும் கோபிசந்த் தகுந்த நேரம் ஒதுக்கியுள்ளார். தற்போது, கணுக்கால் காயத்திலிருந்து சிந்து முழுவதுமாக குணமடைந்துவிட்டார். வரும் மலேசிய, இந்தோனேசியா ஓபனில் பங்கேற்பார். ஆனால், உலக சாம்பியன்ஷிப் போட்டிக்காக சிங்கப்பூர் ஓபனில் பங்கேற்க மாட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?