Advertisement


ஜோகோவிச் ‘ஷாக்’

ஜூன் 05, 2018.
 Comments  
 


djokovic
 

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் காலிறுதியில் செர்பியாவின் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வியடைந்தார். 

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த இப்போட்டியில் இத்தாலியின் செச்சினாட்டோவை சந்தித்தார். முதலிரண்டு செட்டை ஜோகோவிச் 3–6, 6–7 என பறிகொடுத்தார். பின் சுதாரித்த இவர் அடுத்த செட்டை 6–1 என வென்று பதிலடி தந்தார். நான்காவது செட்டில் முன்னணியில் இருந்த ஜோகோவிச் தடுமாற, ‘டை–பிரேக்கருக்கு’ சென்றது. 22 நிமிடம் நீடித்த இதில் 7–6 என செச்சினாட்டோ போராடி வென்றார். முடிவில் ஜோகோவிச் 3–6, 6–7, 6–1, 6–7 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

தியம் அசத்தல்

மற்றொரு காலிறுதியில் ‘நம்பர்–3’ வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவரெவ், தரவரிசையில் 8வது இடத்திலுள்ள ஆஸ்திரியாவின் டொமினிக் தியம் மோதினர்.

துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய தியம் முதல் செட்டை 6–4 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டின்போது, ஜிவரெவ் தொடை பின்பகுதி காயத்தால் அவதிப்பட்டார். இதை பயன்படுத்திக் கொண்ட தியம் இந்த செட்டையும் 6–2 என வசப்படுத்தினார்.

காயம் காரணமாக மூன்றாவது செட்டில் ஜிவரெவ் எவ்வித எதிர்ப்பும் இன்றி சரண் அடைய, தியம் 6–1 என வென்றார். ஒரு மணி நேரம் 50 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் தியம் 6–4, 6–2, 6–1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம், தொடர்ந்து மூன்றாவது முறையாக இத்தொடரின் அரையிறுதிக்குள் நுழைந்தார்.

மடிசன் வெற்றி

பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ‘நம்பர்–13’ வீராங்கனையான அமெரிக்காவின் மடிசன் கீஸ், கஜகஸ்தானின் யூலியா புடின்ட்செவாவை (98வது இடம்) எதிர் கொண்டார். தரவரிசையில் பின்தங்கி இருந்தாலும் புடின்ட்செவா கடும் நெருக்கடி தந்தார்.

முதல் செட்டில் இருவரும் மாறி மாறி புள்ளியை கைப்பற்ற ‘டை பிரேக்கருக்கு’ சென்றது. இதில் போராடிய மடிசன் 7–6 என கைப்பற்றினார். அடுத்த செட்டில் சுதாரித்த இவர் 6–4 என வென்றார். ஒரு மணி நேரம் 24 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில், மடிசன் கீஸ் 7–6, 6–4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம், இத்தொடரில் முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறினார்.

செரினா சந்தேகம்

அமெரிக்க வீராங்கனை செரினா, பிரெஞ்ச் ஓபன் 4ம் சுற்றில் ரஷ்யாவின் ஷரபோவாவை எதிர் கொள்ள இருந்தார். ஆனால், வலது தோள் பகுதியில் ஏற்பட்ட தசைபிடிப்பு காரணமாக போட்டியிலிருந்து விலகினார். இதற்கிடையே, விம்பிள்டன் (ஜூலை 2–15, லண்டன்) கிராண்ட்ஸ்லாம் தொடரிலும் இவர் பங்கேற்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து செரினா கூறுகையில்,‘‘காயத்திற்காக எம்.ஆர்.ஐ., ‘ஸ்கேன்’ எடுக்க உள்ளேன். இதில் கிடைக்கும் முடிவை பொறுத்துதான், விம்பிள்டனில் பங்கேற்பது குறித்து முடிவு செய்ய முடியும்,’’ என்றார்.

 

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?