Advertisement


கால்பந்து பயிற்சியாளர் கோரிக்கை

ஜூன் 05, 2018.
 Comments  
 


Stephen Constantine
 

மும்பை: ‘‘இந்திய கால்பந்து அணியை ஆசிய விளையாட்டில் பங்கேற்க மத்திய அரசு அனுப்ப வேண்டும்,’’ என பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டன்டைன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆசிய விளையாட்டு கால்பந்தில் இந்திய அணி பெரியளவில் சாதித்தது இல்லை. கடந்த இன்ச்சான் (2014) போட்டியில் களமிறங்கிய இந்திய அணி 26 வது இடம் (மொத்தம் 29) தான் பிடித்தது. இதனால் இந்திய ஒலிம்பிக் சங்கம் கால்பந்து அணியை அனுப்ப தயங்கும். 

சமீபகாலமாக இந்திய கால்பந்து வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. வரும் 2019, யு.ஏ.இ.,யில் நடக்கும் ஆசிய கோப்பை தொடருக்கு இந்தியா தகுதி பெற்றது. தற்போது நான்கு நாடுகள் தொடரில் விளையாடுகிறது. 

இந்திய அணி பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டன்டைன் கூறுகையில்,‘‘ இந்திய அணி முன்னேற்றம் அடைய அதிக போட்டிகளில் பங்கேற்க வேண்டும். இதை புரிந்து கொண்டு வரும் ஆசிய விளையாட்டுக்கு இந்திய அணியை அரசு அனுப்ப வேண்டும். இது 23 வயதுக்கு உட்பட்டோருக்கான தொடர். தற்போதைய இந்திய அணியில் 11 பேர் இதில் விளையாடலாம். இதனால் நமது வீரர்களுக்கு அதிக அனுபவம் கிடைக்கும்,’’ என்றார்.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?