Advertisement


செத்ரி நுாறு... இந்தியா ஜோரு: பைனலுக்கு முன்னேறி அசத்தல்

ஜூன் 04, 2018.
 Comments [1]  
 


Intercontinental Cup football, India, Kenya, Sunil Chhetri
 

மும்பை: சுனில் செத்ரியின் 100 வது போட்டியில் இந்திய அணி 3–0 என்ற கோல் கணக்கில் கென்யாவை ஜோராக வீழ்த்தியது. இதன்மூலம் தொடர்ந்து 2 வெற்றியை பதிவு செய்த இந்திய அணி பைனலுக்கு முன்னேறியது.

ஆசிய கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி சொந்தமண்ணில் ‘இன்டர்கான்டினன்டல்’ (கண்டங்களுக்கு இடையிலான) கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்கிறது. இதில் கென்யா, நியூசிலாந்து, சீனதைபே 4 அணிகள் பங்கேற்கின்றன.

முதல் போட்டியில் இந்தியா (5–0), சீன தைபே அணியை வென்றது. நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் 97 வது இடத்திலுள்ள இந்திய அணி, 111வது இடத்தில் இருக்கும் கென்யாவை சந்தித்தது. இந்திய அணி கேப்டன் சுனில் செத்ரிக்கு இது 100 வது சர்வதேச போட்டி.

வாழ்த்திய மழை: கால்பந்துக்கு ஆதரவு தரும் வகையில் நேற்று போட்டி துவங்கும் முன்பாகவே ரசிகர்கள் மைதானத்தில் திரண்டு விட்டனர். 100வது போட்டியில் களிறங்கிய சுனில் செத்ரியை வாழ்த்த மழையும் கொட்டியது. ரசிகர்களின் ‘செத்ரி... செத்ரி’ என்ற இடைவிடாத குரல் நமது வீரர்களுக்கு உற்சாகம் தந்தது.

போட்டியின் 22வது நிமிடம் செத்ரி அடித்த பந்து கோல் போஸ்ட் மேலாக சென்றது. மழை தொடர்ந்ததால் பந்தை கொண்டு செல்வது பெரும் சிரமம் ஆனது. கோல் கீப்பரை நோக்கி அடித்த பந்துகள் முன்னதாக கீழே விழுந்தன. முதல் பாதி கோல் எதுவுமின்றி முடிந்தது.

இரண்டாவது பாதியில் வருண பகவான் வழிவிட்டார். 54வது நிமிடம் ஹாலிசரண் கொடுத்த பந்தை கோலாக மாற்றத் தவறினார் செத்ரி.

கிடைத்த ‘இரண்டு’: 68வது நிமிடத்தில் எதிரணி செய்த தவறு காரணமாக இந்திய அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை சுனில் செத்ரி வேகமாக அடித்தார். பந்து கென்ய கோல்கீப்பர் இடது கையில் பட்டுச் சென்று கோலாக மாற இந்தியா 1–0 என, முன்னிலை பெற்றது.

பைனலுக்கு தகுதி: அடுத்த சில நிமிடத்தில் ஜீஜே தன் பங்கிற்கு ஒரு பீல்டு கோல் அடிக்க இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர். போட்டியின் ‘ஸ்டாப்பேஜ்’ நேரத்தில் (90+2வது) தனி நபராக பந்தை கொண்டு சென்ற செத்ரி, கோல் கீப்பருக்கு மேலாக பந்தை துாக்கி அடித்து கோலாக மாற்றினார். முடிவில் இந்திய அணி 3–0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. முன்னதாக சீனதைபே அணியை வீழ்த்திய இந்தியா, தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்து 6 புள்ளிகளுடன் பைனலுக்கு முன்னேறியது.

டிக்கெட்டுகள் காலி

‘ரசிகர்கள் ஆதரவு தர வேண்டும்’ என்ற வேண்டுகோள் காரணமாக நேற்று போட்டி நடந்த மும்பை அந்தேரி மைதானத்தின் 20,000 டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்து விட்டன. சுனில் செத்ரி கூறுகையில்,‘ எனது வீடியோ இந்தளவுக்கு விளைவை ஏற்படுத்தும் என ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. என்னுடன் இணைந்து ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி,’’ என்றார்.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
Pradeesh Parthasarathy 3 weeks ago | Report abuse
Sethri melum pala vetrigal pera vaazhththukkal ...




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?