Advertisement


பிரெஞ்ச் ஓபன்: காலிறுதியில் நடால்

ஜூன் 04, 2018.
 Comments  
 


French Open Tennis, Nadal, Serena Williams, Halep
 

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் ஸ்பெயினின் நடால், ஜெர்மனியின் மார்டிரரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இதனையடுத்து ஒட்டுமொத்த டென்னிஸ் அரங்கில் தனது 900வது வெற்றியை பதிவு செய்தார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் உலகின் ‘நம்பர்–1’ வீரரான ஸ்பெயினின் ரபெல் நடால், ஜெர்மனியின் மேக்சிமிலியன் மார்டிரர் மோதினர். இரண்டு மணி நேரம், 30 நிமிடம் நீடித்த போட்டியில் அபாரமாக ஆடிய நடால், 6–3, 6–2, 7–6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் 34 முறையாக கிராண்ட்ஸ்லாம் காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

ஐந்தாவது வீரர்: தவிர நடால், தனது 900வது வெற்றியை பதிவு செய்தார். இதுவரை 1,087 போட்டிகளில் பங்கேற்று 900 வெற்றி, 187 தோல்வியை பெற்றுள்ளார். இதன்மூலம் இந்த இலக்கை எட்டிய 5வது வீரரானார். ஏற்கனவே அமெரிக்காவின் ஜிம்மி கானர்ஸ் (1,256 வெற்றி, 279 தோல்வி), சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் (1,149 வெற்றி, 252 தோல்வி), அமெரிக்காவின் இவான் லெண்டில் (1068 வெற்றி, 242 தோல்வி), அர்ஜென்டினாவின் விலாஸ் (949 வெற்றி, 291 தோல்வி) இம்மைல்கல்லை எட்டியிருந்தனர்.

மற்றொரு போட்டியில் தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன், 6–1, 6–2, 5–7, 6–7, 6–2 என்ற செட் கணக்கில் அர்ஜென்டினாவின் டியாகோ ஸ்வார்ட்ஸ்மனிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.


வோஸ்னியாக்கி ஏமாற்றம்

பெண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி, ரஷ்யாவின் டரியா கசட்கினா மோதினர். இதில் வோஸ்னியாக்கி 6–7, 3–6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

மற்றொரு போட்டியில் உலகின் ‘நம்பர்–1’ வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலெப், 6–2, 6–1 என்ற நேர் செட் கணக்கில் பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டன்சை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.

செரினா விலகல்

பெண்கள் ஒற்றையர் 4வது சுற்றில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், ரஷ்யாவின் மரியா ஷரபோவா மோத இருந்தனர். ஆனால் செரினாவின் வலது கை தோள் பகுதியில் உள்ள தசையில் காயம் ஏற்பட்டது. இதனால் இவரால் பந்தை ‘சர்வீஸ்’ செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால், போட்டி துவங்குவதற்கு முன் விலகுவதாக தெரிவித்தார். இதனையடுத்து ஷரபோவா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, காலிறுதிக்குள் நுழைந்தார்.

மற்றொரு போட்டியில் ஜெர்மனியின் கெர்பர், 6–2, 6–3 என்ற நேர் செட் கணக்கில் பிரான்சின் கரோலின் கார்சியாவை வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறினார்.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?