Advertisement


ஆசிய கோப்பை: பயஸ் தேர்வு

ஜூன் 04, 2018.
 Comments  
 


Asian Games, Tennis, Paes, Yuki Bhambri
 

புதுடில்லி: ஆசிய விளையாட்டு டென்னிஸ் போட்டிக்கான இந்திய அணியில் சீனியர் வீரர் பயஸ் இடம் பிடித்துள்ளார். யு.எஸ்., ஓபனில் பங்கேற்பதற்காக யூகி பாம்ப்ரிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவில், 18வது ஆசிய விளையாட்டு (ஆக. 18 – செப். 2) நடக்கவுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள டென்னிஸ் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் யூகி பாம்ப்ரி தேர்வு செய்யப்படவில்லை. இவர், நடப்பு ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான யு.எஸ்., ஓபனில் (ஆக. 27 – செப். 9, இடம்: நியூயார்க்) பங்கேற்க இருப்பதால், ஆசிய விளையாட்டில் இருந்து விடுவிக்குமாறு, அனைத்து இந்திய டென்னிஸ் சங்கத்திடம் (ஏ.ஐ.டி.ஏ.,) அனுமதி கேட்டிருந்தார். இவரது கோரிக்கையை ஏ.ஐ.டி.ஏ., ஏற்றுக் கொண்டது. இதனையடுத்து ஒற்றையர் பிரிவுக்கு ராம்குமார் ராமநாதன், பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன், சுமித் நாகல் தேர்வு செய்யப்பட்டனர்.

பயஸ் வாய்ப்பு: சீனியர் வீரர் லியாண்டர் பயஸ், 44, இரட்டையர் பிரிவு போட்டியில் பங்கேற்க விருப்பம் தெரிவித்திருந்தார். ஆசிய விளையாட்டில் ஒற்றையரில் ஒரு வெண்கலம் (1994), இரட்டையரில் 3 தங்கம் (1992, 94, 96), அணிகள் பிரிவில் ஒரு தங்கம் (1994), ஒரு வெண்கலம் (1990), கலப்பு இரட்டையரில் ஒரு தங்கம் (2006), ஒரு வெண்கலம் (2002) என 8 பதக்கங்கள் குவித்துள்ள இவர், கடந்த 2 தொடர்களில் (2010, 2014) பங்கேற்கவில்லை. இந்நிலையில் இம்முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆசிய விளையாட்டு டென்னிஸ் போட்டிக்கான இந்திய ஆண்கள் அணியின் பயிற்சியாளராக ஜீஷன் அலியும், பெண்கள் அணிக்கு அன்கிதா பாம்ப்ரியும் நியமிக்கப்பட்டுள்ளனர். தரவரிசை அடிப்படையில் அனைவரும் தேர்வு செய்யப்பட்டதாக ஏ.ஐ.டி.ஏ., தெரிவித்துள்ளது.

இந்திய அணி

ஆண்கள்: ராம்குமார் ராமநாதன், பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன், சுமித் நாகல், லியாண்டர் பயஸ், ரோகன் போபண்ணா, திவிஜ் சரண்

பெண்கள்: அன்கிதா ரெய்னா, கர்மன் கவுர், ருதுஜா, பிரன்ஜலா, ரியா பாட்யா, பிரார்தனா தாம்ப்ரே

Advertisement

இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா , நான்காவது ஒரு நாள் ஆட்டம்
இங்கிலாந்தில் ஆஸ்திரேலியா, 5 ஓடிஐ தொடர்கள், 2018
6/21/2018 , 18:30
ரிவர்ஸைட் க்ரெளண்ட், செஸ்ட்டர்-லி-ஸ்ட்ரீட்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?