Advertisement


இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி

ஜூன் 02, 2018.
 Comments  
 


root
 

லீட்ஸ்: பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் இங்கிலாந்து வீழ்ந்தது. இரண்டாவது டெஸ்ட் லீட்சில் நடந்தது. பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 174 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 302 ரன்கள் எடுத்திருந்தது. 

மூன்றாம் நாள் ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட பட்லர் அரை சதம் கடந்தார். குர்ரான் (20), பிராட் (2) விரைவில் திரும்ப, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 363 ரன்களுக்கு ஆல்–அவுட்டாகி, 189 ரன்கள் முன்னிலை பெற்றது. பட்லர் (80) அவுட்டாகாமல் இருந்தார்.

பெஸ் அபாரம்

பாகிஸ்தான் அணிக்கு ஆண்டர்சன் தொல்லை தந்தார். இவரது ‘வேகத்தில்’ அசார் அலி (11), சோகைல் (8) சிக்கினர். இளம் வீரரான டொமினிக் பெஸ் ‘சுழல்’ வலையில் இமாம் (34), உஸ்மான் (33) அவுட்டாகினர். ஆசாத் சபிக் (5), கேப்டன் சர்பராஸ் (8) அணியை கைவிட்டனர். மற்றவர்களும் ஏமாற்ற, பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்சில் 134 ரன்களுக்கு ஆல்–அவுட்டாகி, வீழ்ந்தது. இங்கிலாந்து சார்பில் பெஸ், பிராட் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம், இரண்டு போட்டிகள் கொண்ட தொடர் 1–1 என சமன் ஆனது. 

 

 

 

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?