Advertisement


தினேஷ் கார்த்திக் வாய்ப்பு

ஜூன் 02, 2018.
 Comments [1]  
 


Dinesh Karthik
 

புதுடில்லி: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பர் சகாவுக்குப்பதில் தினேஷ் கார்த்திக் இடம்பிடித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகளுக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்டது. சமீபத்தில், அயர்லாந்து அணி தனது முதல் டெஸ்டில் பாகிஸ்தானிடம் வீழ்ந்தது. ஆப்கானிஸ்தான் அணி முதல் டெஸ்டில் இந்திய அணியை சொந்த மண்ணில் எதிர் கொள்கிறது. வரலாற்று சிறப்புமிக்க இப்போட்டி வரும் 14ம் தேதி பெங்களூருவில் துவங்குகிறது. இதற்கான, ரகானே தலைமையிலான இந்திய அணியில் விக்கெட் கீப்பராக சகா இடம்பெற்றிருந்தார். கடந்த 25ம் தேதி நடந்த ஐ.பி.எல்., இரண்டாவது தகுதிச்சுற்றில் ஐதராபாத் சார்பில் விளையாடியபோது இவரது கை பெருவிரலில் காயம் ஏற்பட்டது. இது, தற்போது வரை குணமாகாத காரணத்தால் டெஸ்டிலிருந்து சகா விலகினார்.

6 வாரம் ஓய்வு

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தற்காலிக செயலர் அமிதாப் சவுத்ரி வெளியிட்ட செய்தியில்,‘ சகாவின் காயம் குறித்து பி.சி.சி.ஐ., மருத்துவக்குழு பரிசோதித்தது. இன்னும் 6 வாரம் ஓய்வு தேவை என அறிவுறுத்தி உள்ளனர். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் சகாவுக்குப்பதில் தினேஷ் கார்த்திக் கீப்பராக செயல்படுவார்,’ என, தெரிவித்துள்ளார்.

8 ஆண்டுக்குப்பின்...

தினேஷ் கார்த்திக் கடைசியாக ஜனவரி 2010ல் வங்கதேசத்திற்கு எதிரான சிட்டகாங் டெஸ்டில் விளையாடினார். இதன்பின், இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. முன்னாள் கேப்டன் தோனி டெஸ்டில் ஓய்வு பெற்றபோதும், சகாவுக்கு இடம் கிடைத்தது. தற்போது, 8 ஆண்டுக்குப்பின், மீண்டும் டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ளார்.

 

 

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
sathish 3 weeks ago | Report abuse
சகாவைவிட இவருக்கு பேட்டிங் திறமை உண்டு. விக்கெட் கீப்பிங்கில் சகா அளவிற்கு இல்லாவிட்டாலும் இவரும் நல்ல விக்கெட் கீப்பர் தான். இதுவரை சகா விளையாடிய போட்டிகளில் அவரது தனிப்பட்ட திறமையினால் அணி ஜெயித்ததா? இங்கிலாந்து அணி விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் அவரின் பெட்டிங் திறமையினால் தான் டெஸ்ட் அணியில் இடம் பெற்றார். இதிலிருந்து டெஸ்ட் விளையாட்டிற்கு பேட்டிங் திறமையும் வேண்டும் என்று தெரிகிறது.




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?