Advertisement


காரைக்குடி அணியில் கார்த்திக்

மே 31, 2018.
 Comments  
 


Dinesh Karthik
 

சென்னை: டி.என்.பி.எல்., தொடரில் வரும் சீசனில் தினேஷ் கார்த்திக் காரைக்குடி அணிக்காக விளையாட உள்ளார்.

தமிழக கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் டி.என்.பி.எல்., தொடர் நடத்தப்படுகிறது. எட்டு அணிகள் பங்கேற்கும் இதன் முதல் சீசனில் (2016) துாத்துக்குடி அணி கோப்பை வென்றது. கடந்த முறை (2017) சேப்பாக்கம் அணி சாதித்தது. மூன்றாவது சீசன் போட்டிகள் வரும் ஜூலை 11 முதல் துவங்குகிறது.

ஒவ்வொரு அணியும் தலா 3 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம். திண்டுக்கல் அணி அஷ்வின், ஜெகதீசன், விவேக்கை தக்கவைத்தது. துாத்துக்குடி அணி ஆனந்த் சுப்ரமணியன், ஆகாஷ் சும்ரா, கணேஷ் மூர்த்தியை தக்கவைத்தது. சர்வதேச போட்டிகள் இருப்பதால் கேப்டன் தினேஷ் கார்த்திக்கை தக்கவைக்கவில்லை.

ஒவ்வொரு அணியும் குறைந்தது 18 வீரர்கள் தேர்வு செய்ய வேண்டும். வரும் சீசனுக்கான ஏலத்தில் 772  வீரர்கள் இடம் பெற்றனர். இதில் நேற்று 128 பேர் தேர்வாகினர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக் இம்முறை காரைக்குடி அணிக்கு சென்றார். ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா அணி கேப்டனாக இருந்தார். வரும் இங்கிலாந்து தொடரில் ஒருநாள், ‘டுவென்டி–20’ போட்டிகளை அடுத்து நடக்கும் டெஸ்ட் அணியிலும் இடம் பெறுவார் என நம்பப்படுகிறது. இதனால் டி.என்.பி.எல்., தொடரில் இந்த சீசன் முழுவதும் இவர் பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது.

வாஷிங்டன் சுந்தர் துாத்துக்குடி அணியில் மீண்டும் இடம் பெற்றார். கடந்த ஐ.பி.எல்., சீசனில் 11 போட்டியில் 4 விக்கெட் மட்டும் சாய்த்த இவர், இங்கிலாந்து செல்வதால் தொடரில் முதல் கட்ட போட்டிகளில் பங்கேற்க மாட்டார். டில்லி அணிக்காக விளையாடிய விஜய் ஷங்கர் சேப்பாக்கம் அணிக்கு தேர்வானார்.

இதேபோல அபினவ் முகுந்த், இம்முறை கோவை அணியில் இடம் பிடித்தார். கடந்த சீசனில் திண்டுக்கல் அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் நடராஜனும் கோவைக்கு சென்றார். ஐ.பி.எல்., தொடரில் இரண்டு சதம் அடித்தவர் முரளி விஜய். இவரை திருச்சி அணி வாங்கியது.

 

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?