Advertisement


சர்தார் சிங், லக்ரா தேர்வு

மே 31, 2018.
 Comments  
 


sardar
 

புதுடில்லி: சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடருக்கான இந்திய அணியில் முன்னாள் கேப்டன் சர்தார் சிங், பிரேந்திர லக்ரா உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர்.

நெதர்லாந்தில், சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் வரும் 23 முதல் ஜூலை 1 வரை நடக்கவுள்ளது. இதில் இந்தியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், நெதர்லாந்து, பாகிஸ்தான் என, 6 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி, தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை வரும் 23ல் சந்திக்கிறது. அதன்பின் அர்ஜென்டினா (ஜூன் 24), ஆஸ்திரேலியா (ஜூன் 27), பெல்ஜியம் (ஜூன் 28), நெதர்லாந்து (ஜூன் 30) அணிகளை எதிர்கொள்கிறது.

இத்தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணியை, ஹாக்கி இந்தியா (எச்.ஐ.,) அறிவித்தது. கேப்டனாக கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். துணைக் கேப்டனாக சிங்லன்சனா சிங் அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் கேப்டன் சர்தார் சிங், பிரேந்திர லக்ரா இடம் பிடித்துள்ளனர். இவர்கள் இருவரும், சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுக்கு தேர்வு செய்யப்படவில்லை. ருபிந்தர், கோதாஜித் சிங், குரிந்தர் சிங் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. ஜர்மன்பிரீத் சிங், சுரேந்தர் குமார் வாய்ப்பு பெற்றனர்.

இந்திய அணி: ஸ்ரீஜேஷ் (கேப்டன், கோல்கீப்பர்), சிங்லன்சனா சிங் (துணைக் கேப்டன்), கிருஷ்ணன் பகதுார் பதக் (கோல்கீப்பர்), ஹர்மன்பிரீத் சிங், வருண் குமார், சுரேந்தர் குமார், ஜர்மன்பிரீத் சிங், பிரேந்திர லக்ரா, அமித் ரோகிதாஸ், மன்பிரீத் சிங், சர்தார் சிங், விவேக் சாகர் பிரசாத், சுனில் , ராமன்தீப் சிங், மன்தீப் சிங், சுமித் குமார் (ஜூனியர்), ஆகாஷ்தீப் சிங், தில்பிரீத் சிங்.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?