Advertisement


சென்னை தான் ‘டாப்’: கிரிக்கெட், கால்பந்தில் ஆதிக்கம்

மே 30, 2018.
 Comments [1]  
 


chennai team
 

சென்னை: நாட்டின் விளையாட்டு தலைநகரமாக சென்னை உருவெடுத்துள்ளது. ஐ.பி.எல்., கிரிக்கெட்டில் சாம்பியன், ஐ.எஸ்.எல்., கால்பந்தில்  கோப்பை, பாட்மின்டனில் வெற்றி என சென்னையின் ஆதிக்கம் தொடர்கிறது.

கடந்த 2008ல் முதன் முதலில் துவங்கப்பட்ட ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணி கேப்டன் ஆனார் தோனி. 2010, 2011ல் கோப்பை பெற்று தந்தார். இரு ஆண்டுக்கு  தடைக்குப் பின் இம்முறை களமிறங்கிய சென்னை அணி மீண்டும் கோப்பை வென்று அசத்தியது. ஐ.பி.எல்., காரணமாக சென்னையில் இருந்து அதிகமான கிரிக்கெட் வீரர்கள் வரத் துவங்கினர். அஷ்வின், முரளி விஜய், தினேஷ் கார்த்திக் வரிசையில் சமீபத்தில் வாஷிங்டன் சுந்தர், விஜய் ஷங்கர் என பலர் வெ ளிச்சத்துக்கு வந்தனர்.

கால்பந்தில் இரண்டு

ஐ.பி.எல்., போல ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரிலும் சென்னை அணி கலக்குகிறது. நான்கு சீசன்களில் மூன்று முறை அரையிறுதிக்கு சென்றது. 2015, 2017–18 என இருமுறை கோப்பை வென்று சாதித்தது.

‘சென்னை’ சிந்து 

கிரிக்கெட், கால்பந்தை தொடர்ந்து சென்னை பாட்மின்டன் அணியும் வந்தது. இதில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை, ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சிந்துவை இணைத்தது பெரிய வெற்றியாக அமைந்தது. இவரது தலைமையில் 2017ல் சென்னை சாம்பியன் ஆனது.

கபடி வருகை

இந்த வரிசையில் கடந்த சீசனில் கபடியும் இணைந்தது. முதன் முறையாக கபடி மைதானத்தில் கால்பதித்த தமிழ் தலைவாஸ் அணி சொதப்பினாலும், வரும் சீசனில் எழுச்சி பெறும் என நம்பலாம்.

தீபிகா பல்லீகல், சத்யன்...

சென்னையின் தீபிகா பல்லீகல், ஜோஷ்னா சின்னப்பா ஸ்குவாஷ் போட்டியில் அசத்துகின்றனர். சமீபத்திய காமன்வெல்த் டேபிள் டென்னிசில் அசத்திய சத்யன், சரத் கமல், ஐந்து முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற ஆனந்த் என பலரும் சென்னையை சேர்ந்தவர்கள் தான்.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
Bebeto 3 weeks ago | Report abuse
இதெல்லாம், முன்னாள் முதல்வர் அம்மா,வின் உழைப்பிற்கும், திட்டங்களுக்கும் கிடைத்த பலன்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?