Advertisement


சபாஷ் ஷரபோவா: பிரெஞ்ச் ஓபனில் அபாரம்

மே 29, 2018.
 Comments  
 


sharapova
 

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு  ஷரபோவா முன்னேறினார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடப்பு ஆண்டின் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான பிரெஞ்ச் ஓபன் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ‘நடப்பு சாம்பியன்’ மற்றும் ‘நம்பர்–1’ வீரரான ஸ்பெயினின் நடால், இத்தாலியின் சிமோனா பலோலியை (129வது இடம்) சந்தித்தார். நேற்று முன்தினம் மழையால் பாதிக்கபட்ட இப்போட்டியின் முதலிரண்டு செட்டை 6–4, 6–3 என நடால் வென்றிருந்தார். மழை தொடர்ந்ததால், மூன்றாவது செட் மட்டும் நேற்று நடந்தது. வழக்கம் போல சீறிய நடால் 7–6 என கைப்பற்றினார். முடிவில், நடால் 6–4, 6–3, 7–6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

மரின் அசத்தல்

ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் குரோஷியாவின் மரின் சிலிச் 6–3, 7–5, 7–6 என ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் டக்வொர்த்தை வீழ்த்தினார்.

ஸ்பெயினின் நட்சத்திர வீரரான டேவிட் பெரர் 6–3, 6–3, 6–7, 6–7, 6–7 என சக வீரரான முனாரிடம் வீழ்ந்தார்.

கனடாவின் 19 வயது வீரரான டேனிஷ் சபோவலோவ் 7–5, 6–4, 6–2 என ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மேனை தோற்கடித்தார்.

மற்ற போட்டிகளில் தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன், இத்தாலியின் பேபியனா, உருகுவேயின் பாப்லோ உள்ளிட்டோர் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

ஷரபோவா வெற்றி

பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ரஷ்யாவின் ஷரபோவா, நெர்தலாந்தின் ஹாகன்காம்ப்பை சந்தித்தார். முதல் செட்டை 6–1 என எளிதாக கைப்பற்றிய ஷரபோவா, அடுத்த செட்டை 4–6 என பறிகொடுத்தார். பின், சுதாரித்த இவர் சரிவிலிருந்து மீண்டு வர, கடைசி செட் 6–3 என வசமானது. முடிவில், ஷரபோவா 6–1, 4–6, 6–3 என வெற்றி பெற்றார்.

செரினா அபாரம்

அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனை செரினா வில்லியம்ஸ், செக் குடியரசின் கிறிஸ்டினா பிலிஸ்கோவாவை எதிர் கொண்டார். குழந்தை பிறந்தபின், பங்கேற்கும் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடர் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இதற்கேற்ப விளையாடிய செரினா 7–6, 6–4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். 

ஸ்பெயினின் முகுருஜா 7–6, 6–2  என ரஷ்யாவின் கஸ்னட்சோவாவை தோற்கடித்தார்.

மற்றொரு முதல் சுற்றில் அமெரிக்காவின் பெதானிக் மடேக் 6–4, 6–3 என சுவீடனின் ஜோகன்னாவை வீழ்த்தினார்.

மற்ற போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர், பிரான்சின் புளோனா பெரோ வெற்றி பெற்றனர்.

பாம்ப்ரி ஏமாற்றம்

ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ‘நம்பர்–93’ வீரரான இந்தியாவின் யூகி பாம்ப்ரி, பெல்ஜியத்தின் ரூபெனை (110வது இடம்) சந்தித்தார். துவக்கம் முதலே ஏமாற்றிய பாம்ப்ரி 4–6, 4–6, 1–6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

போபண்ணா ஜோடி முன்னேற்றம்

ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் போபண்ணா, பிரான்சின் ரோஜர் வாசலின் ஜோடி 6–3, 6–1 என அமெரிக்காவின் பிரிட்ஸ், பிரான்சிஸ் ஜோடியை வீழ்த்தியது.

 

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?