Advertisement


பிரெஞ்ச் ஓபன்: கிவிட்டோவா வெற்றி

மே 28, 2018.
 Comments  
 


French Open Tennis, Petra Kvitova, Djokovic
 

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் செக்குடியரசின் பெட்ரா கிவிட்டோவா வெற்றி பெற்றார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் செக்குடியரசின் பெட்ரா கிவிட்டோவா, பராகுவேயின் வெரோனிகா மோதினர். முதல் செட்டை 3–6 என இழந்த கிவிட்டோவா, பின் எழுச்சி கண்டு அடுத்த 2 செட்களை 6–1, 7–5 எனக் கைப்பற்றினார். முடிவில் கிவிட்டோவா, 3–6, 6–1, 7–5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் பெலாரசின் விக்டோரியா அசரன்கா, 5–7, 5–7 என்ற நேர் செட் கணக்கில் செக்குடியரசின் சினியகோவாவிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.

மற்ற முதல் சுற்றுப் போட்டிகளில் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி, அமெரிக்காவின் மடிசன் கீஸ், ஸ்பெயினின் கார்லா சாரஸ் நவரோ, ஜப்பானின் நவோமி ஒசாகா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

வாவ்ரின்கா தோல்வி: ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் சுவிட்சர்லாந்தின் வாவ்ரின்கா, ஸ்பெயினின் கார்சியா–லோபஸ் மோதினர். இதில் வாவ்ரின்கா, 2–6, 6–3, 6–4, 6–7, 3–6 என்ற கணக்கில் போராடி தோல்வியடைந்து வெளியேறினார்.

மற்றொரு போட்டியில் பிரான்சின் பெனாய்ட், 6–3, 6–7, 7–6, 6–1 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் ராபர்டோ கார்பாலஸ் பயினாவை தோற்கடித்தார்.

மற்றொரு முதல் சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 6–3, 6–4, 6–4 என்ற நேர் செட் கணக்கில் பிரேசிலின் டுட்ரா சில்வாவை வீழ்த்தினார்.

மற்ற முதல் சுற்றுப் போட்டிகளில் ஆஸ்திரியாவின் டொமினிக் தியம், ஸ்பெயினின் ராபர்டோ  பாடிஸ்டா அகுட், லக்சம்பர்க்கின் கில்ஸ் முல்லர் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

Advertisement

நெதர்லாண்ட்ஸ் vs ஸ்காட்லேண்ட் , போட்டி 6
நெதர்லாந்தில் T20I ட்ரை-தொடர், 2018
6/20/2018 , 14:30
விஆர்ஏ க்ரெளண்ட், ஆம்ஸ்டெல்வீன்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?