Advertisement


ஹேசல்வுட் விலகல்

மே 28, 2018.
 Comments  
 


Josh Hazlewood, Australia, Cricket, England ODI Series, Injury
 

சிட்னி: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட், காயம் காரணமாக விலகினார்.

அடுத்த மாதம் இங்கிலாந்து செல்லவுள்ள ஆஸ்திரேலிய அணி, ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி வரும் ஜூன் 13ல் லண்டனில் நடக்கவுள்ளது. இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட் இடம் பெற்றுள்ளார். ஆனால் இவருக்கு முதுகுப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. காயம் முழுமையாக குணமடைய காலதாமதமாகும் என்பதால், இங்கிலாந்து தொடரில் இருந்து விலகினார்.

ஹேசல்வுட்டுக்கு பதிலாக அறிமுக ‘பவுலிங் ஆல்–ரவுண்டர்’ மைக்கேல் நேசர், 28, தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுவரை 31 முதல் தர மற்றும் 38 ‘லிஸ்ட் ஏ’ பிரிவு போட்டிகளில் விளையாடி உள்ள இவர், சமீபத்தில் முடிந்த ‘ஷெபீல்டு ஷீல்டு’ தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குயீன்ஸ்லாந்து அணிக்காக 39 விக்கெட் மற்றும் 294 ரன்கள் எடுத்துள்ளார்.

ஏற்கனவே மிட்சல் ஸ்டார்க், பட் கம்மின்ஸ் உள்ளிட்ட ‘வேகங்கள்’ காயம் காரணமாக விலகினர். இந்நிலையில் ஹேசல்வுட் விலகியிருப்பது பின்னடைவு தான்.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?