Advertisement


இங்கிலாந்து அணியில் ஜென்னிங்ஸ்

மே 28, 2018.
 Comments  
 


Keaton Jennings, England, Test Cricket, Leeds, Pakistan
 

லண்டன்: பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்டில் விளையாடும் இங்கிலாந்து அணியில் கீட்டன் ஜென்னிங்ஸ் இடம் பிடித்துள்ளார். மார்க் ஸ்டோன்மேன் நீக்கப்பட்டார்.

இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. லார்ட்சில் நடந்த முதல் டெஸ்டில் பாகிஸ்தான் அணி வென்றது. இரண்டாவது டெஸ்ட் வரும் ஜூன் 1ல் லீட்சில் துவங்குகிறது. இப்போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது.

லார்ட்ஸ் டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் சொதப்பிய துவக்க வீரர் மார்க் ஸ்டோன்மேன் (4, 9 ரன்) நீக்கப்பட்டார். இவருக்கு பதிலாக கீட்டன் ஜென்னிங்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுவரை 6 டெஸ்டில் விளையாடி உள்ள இவர், கடந்த 2016ல் இந்தியாவுக்கு எதிரான மும்பை டெஸ்டில் அறிமுகமானார். இப்போட்டியில் சதம் கடந்து கைகொடுத்தார்.

இங்கிலாந்து அணி: அலெஸ்டர் குக், கீட்டன் ஜென்னிங்ஸ், ஜோ ரூட் (கேப்டன்), மலான், பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர், டாம் பெஸ், மார்க் உட், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன், கிறிஸ் வோக்ஸ்.

பாக்., அணிக்கு அபராதம்

லார்ட்ஸ் டெஸ்டில் தாமதமாக பந்துவீசியதால் பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பராஸ் அகமதுவுக்கு போட்டி சம்பளத்தில் இருந்து 60 சதவீதமும், மற்ற வீரர்களுக்கு தலா 30 சதவீதமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த 12 மாதங்களுக்குள் பாகிஸ்தான் அணி, மீண்டும் தாமதமாக பந்துவீசினால், கேப்டன் சர்பராஸ் அகமதுவுக்கு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?